]]

Tuesday, June 12, 2007

எனக்கிங்கே யார் துணை?


எனக்கிங்கே யார் துணை?


பரங்கிப்பேட்டை

மவ்லவீ அ. பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ.,


என்னைப் பெற்றெடுத்த என் பெற்றோர்கள் அங்கே!

என் கரம் பிடித்த என் வாழ்க்கைத் துணை அங்கே!!

நான் பெற்றெடுத்த என் பிள்ளை செல்வங்கள் அங்கே!!!

நினைவிலும் நிஜத்திலும் கனவிலும் என் துணை யாரிங்கே?


உடன் பிறந்த உடன்பிறப்புகள் பல பேர் அங்கே!

கூடி வாழும் உற்றார், உறவினர் கூட்டம் அங்கே!!

தொடர்ந்து தோள் கொடுக்கும் நட்பு குழாம் அங்கே!!!

எல்லாமிருந்தும், எதுவுமில்லாத வாழ்க்கையே இங்கே!?


துள்ளித் திரிந்த காலமதின் சுந்தர தெருக்கள் அங்கே!

துறவறம் பூணாத அழகு வாழ்க்கை அமைதியுடன் அங்கே!!

துக்கத்திலும் கண்ணீர் துடைக்கும் சொந்தங்கள் அங்கே!!!

துவண்டு போனால் கைகொடுப்பவருண்டா இங்கே?


கை நிறைய சம்பாத்தியம் குறையில்லாமல் இங்கே!

கூத்தடிக்கும் மேலைநாட்டு கலாச்சாரம் கூடுது இங்கே!!

சீர்கேடான நவ நாகரீக பழக்க வழக்கங்கள் இங்கே!!!

இத்தனையும் நம்மூர் வாழ்க்கையை வழங்கிடுமா இங்கே?


திக்குத் தெரியாத காட்டில் திரியும் யாத்ரீகன் நான்!

திசை தெரியா பாலைவனத்தில் சுற்றும் பயணி நான்!!

ஆழமறியா ஆழ்கடலில் நீச்சலடிக்கும் மாவீரன் நான்!!!

அத்துனை நிலைகளிலும் எனக்கிங்கே யார் துணைவன்?


என்னைப் படைத்த ஏக இறைவனைத் தவிர

எவருமுண்டோ துணையெனக்கிங்கே? - நாளை

அளவிலா அன்புடனும் நிகரில்லா அருளுடன்

அவனே தருவான் வளமான வாழ்வை அங்கே!



நன்றி : கே-டிக் செய்தி மடல் மாத இதழ், குவைத். பிப்ரவரி 2007

1 comments:

said...

அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தம் நாட்டில் வேலை வாய்ப்பு இல்லமல் வெளிநாடு செல்லும் அனைவருக்கும் இந்த கவிதை முன் உதரணம் எனக்கிங்கே யார் துணை வரிகால் அருமை இனியாவது வரும் காலங்கலில் வளரும் இலைஞர்கள் சொந்த நாட்டில் வேலைவாய்ப்புகள் கிடைக்க போரடவேண்டும் இன்ஷா அல்லாஹ்