குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை(KPIA)யின் 2ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம(த்)துல்லாஹி...
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் இம்மாதம் (ஜூன் 2007) 8ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் (அஸர் தொழுகைக்குப் பிறகு) குவைத், ஸால்மியா பகுதியில் உள்ள மீ.மெ. இல்லத்தில் (சகோ. மீ.மெ. ஹாஜா கமால் இல்லம்) குவைத் வாழ் பரங்கிப்பேட்டை உடன்பிறப்புகளின் அமைப்பான 'குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)' யின் இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியும், புதிய நிர்வாகிகள் தேர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 
பேரவைத் தலைவர் மவ்லவீ அ.பா.கலீல் அஹ்மத் பாகவீ தலைமையேற்க, சகோ. அபூ ஜைனப் கிராஅத் ஓத, செயற்குழு உறுப்பினர் சகோ. B.A. அப்துர் ரஜ்ஜாக் வரவேற்புரையாற்ற நிகழ்ச்சிகள் தொடங்கின. தலைவரின் தலைமையுரைக்கு பிறகு, செயலாளர் சகோ. மீ.மெ. ஹாஜா கமால் பேரவையின் ஆண்டறிக்கையை வாசித்து, பேரவை மூலம் இதுவரை செய்த சேவைகள் குறித்து எடுத்துரைத்தார். பொருளாளர் சகோ. ஹாஜி S. குலாம் ஜெய்லானி மியான் கடந்த வருடத்தின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். செயற்குழு உறுப்பினர் சகோ. S.M.S. ஸலாஹுத்தீன் நன்றியுரையாற்ற தேனீர் விருந்துடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன. 
இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பரங்கிப்பேட்டையை சேர்ந்த பெரும்பாலான சகோதரர்கள் கலந்து கொண்டனர். பொதுக்குழுவின் ஏகமனதான தீர்மானத்துடன் கீழ்வரும் சகோதரர்கள் இப்பேரவையின் இவ்வருட (2007 - 2008) நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை(KPIA)யின் 2007-2008ம் வருட நிர்வாகிகள்
தலைவர் : 
மவ்லவீ அ. பா. கலீல் அஹ்மத் பாகவீ த/பெ A.K. அப்துல் பாரி 
துணைத் தலைவர்கள்:
1. Z. ஹபீபுல்லாஹ் மரைக்காயர் த/பெ S.K. ஜுபைர் மரைக்காயர் 
2. H. இக்பால் மரைக்காயர் த/பெ H. ஹஸன் குத்தூஸ் 
செயலாளர் : 
B.A. அப்துல் ஹமீது (அலீம்) த/பெ A. பஷீர் அஹ்மது
இணை செயலாளர்: 
மீ.மெ. ஹாஜா கமால் த/பெ மீ.மெ. மீரா ஹுஸைன் 
துணைச் செயலாளர்கள்: 
1. S. கவுஸ் அலி த/பெ S.A. ஷேக் அப்துல் காதர் 
2. B. தமீமுல் அன்ஸாரி த/பெ K.M. முஹம்மது பாஷா
3. B.A. அப்துர் ரஜ்ஜாக் த/பெ A. பஷீர் அஹ்மது 
பொருளாளர் : 
ஹாஜி S. குலாம் ஜெய்லானி மியான் த/பெ Y.M. சுல்தான் சாபு 
துணை பொருளாளர்: 
A. செய்யது ஷாஹுல் ஹமீது த/பெ A. அப்துல் அஜீஸ் 
தணிக்கையாளர் (ஆடிட்டர்): 
S.M.S. ஸலாஹுத்தீன் த/பெ K.N. ஷேக் மரைக்காயர்
ஆலோசனை குழுத் தலைவர் : 
H. முஹம்மது யூனுஸ் த/பெ H. ஹஸன் குத்தூஸ் 
துணைத் தலைவர் (ஆலோசனை) : 
U. நிஸார் அஹ்மது த/பெ M. முஹம்மது யூசுஃப் 
செயற்குழுத் தலைவர் : 
R.B. ஜாகிர் ஹுஸைன் த/பெ M.R. பாபா ஷரீஃப் 
துணைத் தலைவர் : 
H. ஷாஹுல் ஹமீது த/பெ ஹுமாயூன் கபீர் அஹமது 
செயற்குழு உறுப்பினர்கள் :
1. S.A. பீர் முஹம்மது அலி த/பெ M.S. ஷேக் ஆரிஃப் 
2. S. ஷர்புத்தீன் த/பெ ஷேக் முஹம்மது 
3. P. ஹாஜா மக்தூம் த/பெ ஃபக்கீர்ஷா மரைக்காயர் 
4. N. முஹம்மது ஆரிஃப் த/பெ நவாஸ் கான் 
5. A.B. அப்துல் நஜீர் த/பெ A.K. அப்துல் பாரி 
6. D. ஆஷிக் பாபு த/பெ தல்பாதர் மரைக்காயர் 
7. P. செய்யது அக்பர் அலி த/பெ முஹம்மது பாஷா 
8. M.U. அபுல் ஹஸன் த/பெ முஹம்மது உஸ்மான் 
9. முஹம்மது மொய்தீன் த/பெ யூசுஃப் முஹம்மது 
10. J.M. அல் அமான் த/பெ H.M. ஜுனைத் 
11. S. எஹ்யா மரைக்காயர் த/பெ M.I. சுல்தான் மரைக்காயர் 
12. J. ஹஸன் த/பெ ஜாபர் அலி 
13. I. முஸ்தஃபா த/பெ இப்ராஹீம் 
14. G. ஷேக் மொய்தீன் த/பெ கவுஸ் ஹமீது 
15. அல்காஃப் ஹுஸைன் த/பெ முஹம்மது ஹனீஃபா 
16. A. ஜாக்கீர் ஹுஸைன் த/பெ அபூ துராப் 


2 comments:
இந்தக் குழு மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்தும் அதே வேளையில் இந்த குழுவால் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை பிறருடன் பகிர்ந்துக் கொண்டால் அடுத்தவர்களுக்கும் ஒரு தூண்டுதலாக அமையும்.
நிர்வாகிகள் அனைவருக்கும் ஸலாமும் வாழ்த்துக்களும்.
ஜிஎன்
நிர்வாகம் - வலைப்பூ
KPIA-ன் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment