]]

Tuesday, August 28, 2007

பாண்டியன் கிராம பாங்கில் காலியிடங்கள்

பாண்டியன் கிராம பாங்கில் 110 காலியிடங்கள்


மண்டல ஊரக வங்கிகள் என அழைக்கப்படும் ஆர்.ஆர்.பிக்களில் ஒன்று தமிழகத்தில் இயங்கி வரும் பாண்டியன் கிராம பாங்க்.

இதன் அலுவலகங்களில் காலியாகவுள்ள ஆபீசர் மற்றும் கிளார்க் பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோட் எண் 1 : ஆபீசர்

காலியிடங்கள் : 53

வயது: ஆகஸ்ட் 15, 2007 அன்று 20 முதல் 26க்குள் இருக்க வேண்டும்.

தகுதிகள்:

பட்டப்படிப்பு ஒன்றில் குறைந்தது 60 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர், அக்கவுண்டிங், மேனேஜ்மென்ட், இன்ஜினியரிங், பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன், சட்டம், விவசாயம், கால்நடை மருத்துவம், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.சி.ஏ., சி.ஏ., சிவில் இன்ஜினியரிங் தகுதிகளைப் பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை தரப்படும்.

கோட் எண் 2 : கிளார்க்/கேஷியர்

காலியிடங்கள் : 57

வயது: ஆகஸ்ட் 15, 2007 அன்று 20 முதல் 26க்குள் இருக்க வேண்டும்.

தகுதிகள்:

பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி அல்லது +2ல் 55 சதவீதத்துடன் தேர்ச்சி அல்லது 60 சதவீதத்துடன் 10ம் வகுப்பு அல்லது மெட்ரிக்கில் தேர்ச்சி.

பாங்கிங் டிப்ளமோ முடித்திருப்போருக்கு முன்னுரிமை.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

எம்.எஸ். தாஸ், எம்.எஸ். வேர்ட், எம்.எஸ். எக்செல், நெட்வொர்க்கிங் இவற்றில் திறன் பெற்றவருக்கும் முன்னுரிமை தரப்படும்.

பொதுவாக சில குறிப்புகள்

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும்.


உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகள் சலுகை தரப்படும்.

தேர்வு முறை

2 பணிகளுக்குமே மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 4 இடங்களில் மட்டுமே தேர்வு நடத்தப்படும்.


ஆபீசர் பணிக்கான போட்டித் தேர்வு டிசம்பர் 9 அன்றும் கிளார்க் பணிக்கான தேர்வு டிசம்பர் 2, 2007 அன்றும் நடத்தப்படும். எனவே தகுதியுடையவர் 2 பணிகளுக்குமே விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை

முழு விபரங்களும், படிவமும் இனி வரவிருக்கும் செப்டம்பர் 1, 2007 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகவுள்ளது. பார்த்துக் கொள்ளவும்.

இவற்றை www.iob.com இன்டர்நெட் தளத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.


விண்ணப்பக் கட்டணம் ஒரு பணிக்கு ரூ.300.

2 பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.600 செலுத்தவேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஒரு பணிக்கு ரூ.50 மட்டுமே.

கட்டணமானது டிடியாகவும் பாங்கர்ஸ் செக்காகவும் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். இது "PANDYAN GRAMA BANK – RECRUITMENT PROJECT 2007" என்ற பெயரில் மதுரையில் மாற்றத்தக்கதாக எடுக்கப்பட வேண்டும்.

டிடியின் பின்புறம் உங்களது பெயர், பணியின் பெயர், முகவரி ஆகியவை எழுதப்பட வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. ஓ.பிசி. பிரிவினர் ஜாதிச் சான்றிதழின் அட்டெஸ்டட் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பம் சாதாரண தபாலில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

அனைத்து சான்றிதழ்களுக்கான அட்டெஸ்டட் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பும் உறையின் இடது மேற்புறமாக எந்தப் பணிக்கான விண்ணப்பம், பணியின் கோட் எண், பாண்டியன் கிராம பாங்க் ரெக்ரூட்மென்ட் புராஜக்ட் 2007, தேர்வு மையம், மையத்தின் கோட் எண் ஆகியவற்றை தவறாமல் எழுத வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி

POST BOX NO. 8597,

KANDIVALI (EAST),

MUMBAI - 400 101.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 22, 2007

0 comments: