குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த முப்பெரும் விழா! சிறப்பு விருந்தினராக CMN ஸலீம் பங்கேற்று சிறப்புரை!!
- ஹிஜ்ரீ / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி!
- கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
- சங்கத்தின் 6ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!!!
ஹிஜ்ரீ / இஸ்லாமியப் புத்தாண்டு நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்த 'முப்பெரும் விழா', (1) ஹிஜ்ரீ / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி (2) கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி (3) சங்கத்தின் 6ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி என தொடர்ந்து இரண்டு நாட்கள், மூன்று இடங்களில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற்றன. அல்ஹம்து லில்லாஹ்...
தலைவர் மவ்லவீ அஷ்-ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத், தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு முப்பெரும் விழாவில் சங்கத்தின் அழைப்பின் பேரில் தமிழகத் திலிருந்து வருகை தந்த சமூக நீதி அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக நீதி முரசு மாத இதழின் ஆசிரியரும், சீரிய சிந்தனையாளரும், சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு மிகப்பெரும் களப்பணியாற்றி வருபவருமான ஆலி ஜனாப் CMN முஹம்மது ஸலீம் M.A., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முதல் நிகழ்ச்சி:
16.12.2010 வியாழக்கிழமை இரவு 6:45 மணி முதல் இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:45 மணி வரை குவைத், ஃபஹாஹீல், 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ' பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ பள்ளிவாசலின் துணை இமாம் எகிப்தைச் சேர்ந்த அஷ்-ஷைஃக் மஜ்திகா அப்துஹு ஈத், இறைமறை திருக்குர்ஆனை கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். அவர்களின் ஓதுதல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது மட்டுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களின் பக்கம் உள்ளங்களை திருப்பக்கூடிய வகையில் அமைந்திருந்தது. சங்கத்தின் மூத்த ஆலோசகர் அல்ஹாஜ் டில்லி பாஷா (எ) ஏ. அப்துல் காதர், முன்னிலை வகிக்க, சங்கத்தின் கல்விக் குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இண்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., வரவேற்புரையுடன் அறிமுகவுரையாற்ற நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
தலைவரின் தலைமையுரைக்கு பின்... CMN ஸலீம் அவர்கள் 'இஸ்லாமியர்களின் கல்வி... நேற்று... இன்று... நாளை...' என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான பேருரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்த கல்வி முறை, மதரஸா பாடத் திட்டம், ஆங்கிலேயரின் பிடியில் நாடு இருந்த போது மாற்றப்பட்ட கல்விக் கொள்கை, அதனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பாதிப்புகள், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி, நாடு பிரிவினை, சுதந்திரத்திற்கு பின்பும் மாறாத நிலை, நீதிபதி சச்சார் குழு அறிக்கை, இன்றைய சூழலில் நமக்குத் தேவைப்படும் கல்வி, கற்க வேண்டிய பாடங்கள், கவனம் செலுத்த வேண்டிய துறைகள், அதற்கான வழிமுறைகள், அரசு அறிவித்திருக்கும் சலுகைகள் போன்றவற்றை தெளிவாக எடுத்துரைத்தார்.
பராமரிப்பு காரணமாக உள் பள்ளியில் நிகழ்ச்சி நடத்த முடியாமல் வெளி பள்ளியில் நடத்தப்பட்டாலும், வெளி பள்ளி முழுவதும் மக்கள் நிரம்பியிருந்தனர். அனைவரின் முகத்திலும் சொற்பொழிவினால் ஏற்பட்ட தாக்கத்தை காண முடிந்தது.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த மக்களின் சந்தேகங்களை தீர்க்கும் 'கேள்வி-பதில் அரங்கம்' நடைபெற்றது. தொடுக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பான முறையில் பதில் அளித்து சந்தேகங்களை தீர்த்து வைத்தார் CMN ஸலீம் அவர்கள்.
சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச்.எம். முஹம்மது நாஸர், நன்றியுரையாற்ற, சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ ஹழ்ரத், துஆ ஓத, கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீரும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. பெண்களுக்கு தனியிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரண்டாவது நிகழ்ச்சி:
17.12.2010 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:15 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பகல் 1:15 மணி வரை குவைத், ஹவல்லி, 'அஷ்-ஷைக்ஃகா ஸபீக்கா' பள்ளிவாசலில் சிறப்புரை நடைபெற்றது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., அவர்களின் அறிமுகவுரைக்குப் பிறகு... CMN ஸலீம் அவர்கள் 'தற்போதையத் தேவை... சமுதாயச் சேவை...' என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் ஆற்ற வேண்டிய பணிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் தற்போதைய சூழலில் செய்ய வேண்டிய கடமைகள், அழைப்புப் பணியின் முக்கியத்துவம், கல்விப் பணிகளில் கருத்தொற்றுமை ஏற்படுத்துவது, மாற்று மத சகோதரர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய அழகிய நடைமுறைகள் போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.
தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத், துஆ ஓத, கலந்து கொண்ட அனைவருக்கும் ஹவல்லி கிளை சகோதரர்கள் சார்பாக குளிர்பானம் வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சி ஆண்களுக்கும் மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மூன்றாவது நிகழ்ச்சி:
17.12.2010 வெள்ளிக்கிழமை இரவு 6:45 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 9:45 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப, 'அல்-ஷாயா' பள்ளிவாசலில் சிறப்புரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இளவல் எம்.என். அப்துல் பாஸித், இறைமறை திருக்குர்ஆனை கிராஅத் ஓத, சங்கத்தின் மூத்த ஆலோசகர்கள் முன்னிலை வகிக்க, சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் பி.ஏ., வரவேற்புரையாற்ற நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
தலைவரின் தலைமையுரைக்கு பின்... CMN ஸலீம் அவர்கள் 'மறைக்கப்பட்ட நமது வரலாறும்... அதை மீட்டெடுப்பதில் நம்முடைய பங்களிப்பும்....' என்ற தலைப்பில் கருத்தாழமிக்க அற்புதமான பேருரை ஒன்றை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்த முஸ்லிம்களின் ஆட்சி, பிற சமய மக்களை நடத்திய முறை, கல்வித் திட்டம், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நுழைந்த வரலாறு, ஆங்கிலேயரின் பிடியில் நாடு இருந்த போது நயவஞ்சகமாக சீரழிக்கப்பட்ட சமூக ஒற்றுமை, அதனால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பாதிப்புகள், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி, இந்திய விடுதலைக்காக பாடுபட்ட முஸ்லிம்கள், நாடு பிரிவினை, சுதந்திரத்திற்கு பின்பும் மாறாத நிலை, மறக்கடிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் வரலாறு, இருட்டடிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் வீரர்களின் தியாகம், அவற்றையெல்லாம் மீட்டெடுப்பதற்கு இன்றைய சூழலில் நமக்குத் தேவைப்படும் வரலாற்றுக் கல்வி, கற்க வேண்டிய பாடங்கள், கவனம் செலுத்த வேண்டிய படிப்புகள், வருங்கால சந்ததிகளை வளப்படுத்தும் வழிமுறைகள் போன்றவற்றை தெளிவாக எடுத்துரைத்தார்.
வாழ்த்துரை:
குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம், சமூகப் பிரிவின் முதன்மை அதிகாரி அஷ்-ஷைக் அஹ்மத் அல்-தராவீ அவர்கள் ஆங்கிலத்தில் வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது வாழ்த்துரையில், குவைத் வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு சங்கம் ஆற்றி வரும் பணிகளை பாராட்டியதுடன், சமுதாயப் பணிகள் செய்வதற்கு சங்கத்திற்கு தேவையான மேலதிக அரசு சார்ந்த அனுமதிகளை உடனடியாக பெற்றுத் தருவதாக கூறினார். ஹிஜ்ரா நிகழ்வின் மூலமாக நாம் பெற வேண்டிய படிப்பனைகளையும் கோடிட்டு காட்டினார்.
'சமூக நீதிப் போராளி' பட்டம்:
CMN ஸலீம் அவர்களுக்கும், முதன்மை அதிகாரி அஷ்-ஷைக் அஹ்மத் அல்-தராவீ அவர்களுக்கும் சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்களால் சால்வை போர்த்தப்பட்டு கவுரவம் அளிக்கப்பட்டது. CMN ஸலீம் அவர்களின் சேவைகளை பாராட்டி 'சமூக நீதிப் போராளி' என்ற பட்டத்தையும் அளித்து அவரின் செயற்பாடுகளை கௌரவித்தது.
உள் பள்ளி முழுவதும் மக்கள் நிரம்பியிருந்தனர். அனைவரின் முகத்திலும் சொற்பாழிவினால் ஏற்பட்ட தாக்கத்தை காண முடிந்தது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக வரலாறு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த மக்களின் சந்தேகங்களை தீர்க்கும் 'கேள்வி-பதில் அரங்கம்' நடைபெற்றது. கேட்கப்பட்ட அனைத்து வினாக்களுக்கும் சிறப்பான முறையில் விடை அளித்து சந்தேகங்களை தீர்த்து வைத்தார் CMN ஸலீம் அவர்கள்.
சங்கத்தின் பொருளாளர் அல்ஹாஜ் எம். ஜாஹிர் ஹுஸைன், நன்றியுரையாற்ற, சங்கத்தின் திக்ர் மஜ்லிஸ் குழு தலைவர் அஷ்-ஷைஃக் ஏ. ஷாஜஹான் ஹழ்ரத், துஆ ஓத, கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. பெண்களுக்கு தனியிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாட்காட்டி வெளியீடு:
ஆங்கிலம் / ஹிஜ்ரீ தேதிகள், இஸ்லாமிய முக்கிய தினங்கள் மற்றும் குவைத் அரசாங்க விடுமுறை தினங்கள் போன்றவற்றுடன் தமிழ், அரபி மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் உள்ளடக்கிய பெரிய அளவிளான வண்ண நாட்காட்டி(Calendar)யை வருடந்தோறும் வெளியிட்டு மக்களுக்கு அன்பளிப்பாக வழங்குவது சங்கத்தின் பணிகளில் ஒன்றாகும். அந்த வகையில் இரண்டாவது ஆண்டாக இவ்வருட (2011) நாட்காட்டி வெளியீட்டு நிகழ்ச்சியும் இந்த முப்பெரும் விழாவில் நடைபெற்றது.
CMN ஸலீம் அவர்கள் நாட்காட்டியை வெளியிட, முதல் பிரதியை சங்கத்தின் மூத்த ஆலோசகரும், குவைத் அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி ஜமாஅத்தின் தலைவரும், லக்கி அச்சத்தின் அதிபருமான அல்ஹாஜ் லக்கி ஏ. சுலைமான் பாட்சா அவர்களும், இரண்டாவது பிரதியை சங்கத்தின் மூத்த ஆலோசகரும், திருச்சி பிஸ்மில்லாஹ் (அல்-ஷாஃபி) உணவகத்தின் அதிபருமான அல்ஹாஜ் டில்லி பாஷா (எ) ஏ. அப்துல் காதர் அவர்களும், மூன்றாவது பிரதியை சங்கத்தின் மூத்த ஆலோசகரும், குவைத் பூப்யான் இஸ்லாமிய வங்கியின் துணை பொது மேலாளருமாகிய அல்ஹாஜ் எம். ஜமால் ஜஃபர் அவர்களும், அடுத்தடுத்த பிரதிகளை சங்கத்தின் மூத்த ஆலோசகரும், குவைத் அல் ஈமான் நற்பணி மன்றத்தின் தலைவரும், சீமாட்டி சில்க்ஸ் நிறுவனங்களின் அதிபருமாகிய அல்ஹாஜ் எம். பஷீர் அஹ்மத் அவர்களும், சங்கத்தின் ஆலோசகரும், குவைத் வடக்குமாங்குடி ஜமாஅத்தின் தலைவரும், மஹாராஜா டெக்ஸ்டைல் சில்க் சென்டர் நிறுவனத்தின் அதிபருமாகிய ஆலி ஜனாப் எஸ்.என். அப்துர் ரஜ்ஜாக் அவர்களும், சங்கத்தின் ஆலோசகரும், சுமங்கலி மற்றும் சுப்ரீம் டெக்ஸ் நிறுவனங்களின் அதிபருமாகிய அல்ஹாஜ் ஏ. முஹம்மது அன்ஸாரி அவர்களும், குவைத் முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றத்தின் துணைத் தலைவர் திரு கே. நடராஜன் அவர்களும், குவைத் தாய் மண் கலை இலக்கியப் பேரவையின் தலைவர் திரு அன்பரசன் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
சிறப்பு துஆ
மறைந்த மாமேதை, சன்மார்க்க சட்டத் திலகம், தப்லீக் ஜமாஅத் அமீர் திண்டுக்கல் யூசுஃபிய்யா அரபிக்கல்லூரின் முதல்வர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் அ. கலீல் அஹ்மது மன்பயி கீரனூரி ஹழ்ரத் அவர்கள் கடந்த வியாழக்கிழமை (16.12.2010) வஃபாத்தான செய்தியறிந்து சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதுடன், மேற்கண்ட மூன்று நிகழ்ச்சிகளிலும் ஹழ்ரத் அவர்களின் சேவைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு சிறப்பு துஆக்களும் செய்யப்பட்டன.
இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகள் அனைத்தையும் சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., தொகுத்து வழங்கியதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
இச்சிறப்பு மிகு நிகழ்ச்சிகளில் சங்கம் வெளியிட்ட 2011ம் வருட நாட்காட்டி மற்றும் 'K-Tic பிறை செய்தி மடல்' மாத இதழின் 'ஹிஜ்ரீ / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பிதழ்' ஆகியவை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இச்சிறப்புமிகு முப்பெரும் விழாவில் குவைத் வாழ் தமிழ் பேசும் மக்கள் முஸ்லிம்கள் மற்றும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கொள்கை, கட்சி, அமைப்பு, இயக்கம், அரசியல் வேறுபாடின்றி, தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடைந்தனர். ஃபஹாஹீலில் ஏறக்குறைய 250 நபர்களும், ஹவல்லியில் ஏறக்குறைய 125 நபர்களும், மிர்காபில் ஏறக்குறைய 500 நபர்களும் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளையும் சேர்த்தால் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சுமார் 1000 நபர்கள் வரை கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணி யாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலதிக விபரங்களுக்கு...
துரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82
இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹு குழமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group
செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்
இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றனர் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள்.
0 comments:
Post a Comment