]]

Thursday, February 10, 2011

குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 6ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்!

நீடுர் அரபுக் கல்லூரி முதல்வர் மவ்லானா . இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!!

  • தொடர்ந்து 3 நாட்கள் 4 இடங்களில் ஸீரத்துன் நபி (ஸல்) நிகழ்ச்சிகள்!
  • குவைத் வாழ் தமிழ் ஆலிம் பெருமக்களும், பிற அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் கருத்தரங்கம்!
  • குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் குழந்தைகள் பங்குபெறும் மழலையர் நிகழ்ச்சிகள்!
  • ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீடு!



பேரன்புடையீர்
! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தில் அவர்களின் வரலாற்றை மக்களின் உள்ளங்களில் பதிவு செய்வதற்காக குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்' தொடர்ந்து மூன்று நாட்கள் நான்கு இடங்களில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.

சங்கத்தின் தலைவர் விஸ்வகுடி மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் தமிழகத்திலிருந்து வருகை தரும் நீடுர், மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரியின் முதல்வரும், நீடுர்-நெய்வாசல் பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாமும், பன்னூல் ஆசிரியரும், சீரிய சிந்தனையாளருமான மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் . முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

முதல் நிகழ்ச்சி:

17.02.2011 வியாழக்கிழமை இரவு 6:00 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் 'புகழே...! உம்மை புகழ்வது எப்படி?' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனியிட வசதியும், அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இரண்டாம் நிகழ்ச்சி:

18.02.2011 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:15 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து குவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'அஷ்-ஷைக்ஃகா ஸபீக்கா' பள்ளிவாசலில் 'ஈருலக வாழ்வின் வழிகாட்டி' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும்.

இந்நிகழ்ச்சி ஆண்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் நிகழ்ச்சி:

18.02.2011 வெள்ளிக்கிழமை இரவு 6:00 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'முஹம்மது அப்துல் அஜீஸ் அல் உதைபீ (X-Cite / அல் கானிம் / பைத்துக் டவர் / சூக்குல் வதனிய்யா அருகில் உள்ள)' பள்ளிவாசலில் 'அல்லாஹ் அழைக்கும் அண்ணல் நபி (ஸல்)' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும்.

K-Tic பிறை செய்தி மடல் மாத இதழின் 6ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்படும்.

மாலை 4:00 மணி முதல் அஸர் தொழுகையைத் தொடர்ந்து மக்ரிப் வரை குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய குழந்தைகள் பங்குபெறும் திருக்குர்ஆன் கிராஅத், சூரா / திக்ர் / துஆ ஒப்புவித்தல், சொற்பொழிவு மற்றும் உரையாடல் / வினாடி-வினா ஆகிய மழலையர் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனியிட வசதியும், அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நான்காம் நிகழ்ச்சி:

19.02.2011 சனிக்கிழமை இரவு 6:00 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து குவைத், ஜஹ்ரா, அம்கரா பகுதியில் உள்ள 'ஸகன் அல் உஜாப் (அம்கரா பேச்சிலர் சிட்டியிலுள்ள)' பள்ளிவாசலில் 'சமூக நல்லிணக்கம் பேணிய சாந்த நபி (ஸல்)' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும்.

இந்நிகழ்ச்சி ஆண்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு உணவும் வழங்கப்படும்.

இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்திலும் குவைத் வாழ் தமிழ் உலமா பெருமக்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாழ்த்துரைகளையும், சிற்றுரைகளையும் வழங்க இருக்கின்றனர். துஆவுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் இனிதே நிறைவுபெறும் இன்ஷா அல்லாஹ்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிற சமய சகோதரர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப் பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் துரித சேவை அலைபேசி எண் (+965) 97 87 24 82 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றனர் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள்.

சுதந்திர தின பொன்விழா மற்றும் 20வது ஆண்டு விடுதலை நாள் விழா கொண்டாடும் குவைத் மக்களுக்கு சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்!

0 comments: