]]
Showing posts with label கடற்கரை பகுதி. Show all posts
Showing posts with label கடற்கரை பகுதி. Show all posts

Saturday, June 30, 2007

கடற்கரை பகுதியில் வீடு பெறுவோர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு

கடற்கரை பகுதியில் வீடு பெறுவோர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு



கடலூர் மாவட்டத்தில் கடற்கரையில் இருந்து 200 மீட்டருக்குள் மற்றும் உப்பங்கழியில் இருந்து 200 மீட்டருக்குள் உள்ள பகுதிகளில் பாதிப்புகுள்ளாகும் வீடுகளில் நிரந்தர வீடுகள் பெறுவோர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் கடற்கரையில் இருந்து 200 மீட்டருக்குள் மற்றும் உப்பங்கழியில் இருந்து 200 மீட்டருக்குள் உள்ள பகுதிகளில் பாதிப்புகுள்ளாகும் அனைத்து வீடுகளையும் நிரந்தர வீடுகளாக கட்டித் தர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வருவாய் துறையினரால் கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டு பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கான பயனாளிகள் பட்டியல் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், வி.ஏ.ஓ., அலுவலகம், நியாய விலைக்கடை மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் ஆகிய இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் இருந்து 200 மீட்டருக்குள் மற்றும் உப்பங்கழியில் இருந்து 200 மீட்டருக்குள் குடியிருப்பவர்கள் இந்த பட்டியலை சரிபார்த்து பெயர் ஏதேனும் விடுபட்டிருந்தால் அல்லது தவறாக இருந்தால் மாற்றம் செய்ய வேண்டும் எனில் வரும் 12ம் தேதிக்குள் தாசில்தார், கலெக்டரிடம் கோரிக்கை கடிதம் கொடுக்க வேண்டும்.

பின்னர் பரிசீலனையில் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உரிய திருத்தங்களுடன் முடிவான பட்டியல் இறுதி செய்யப்படும். பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் அதில் மாற்றங்கள் இருந்தால் ஏதும் செய்யப்படமாட்டாது.