]]
Showing posts with label சுருக்கெழுத்து. Show all posts
Showing posts with label சுருக்கெழுத்து. Show all posts

Monday, August 20, 2007

சுருக்கெழுத்து தட்டச்சு பிரிவில் காலி பணியிடங்கள்

சுருக்கெழுத்து தட்டச்சு பிரிவில் காலி பணியிடங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்

கடலூர் செம்மண்டலம் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சுருக்கெழுத்து தட்டச்சு பிரிவில் பி.சி., வகுப்பினருக்கான பணியிடம் காலியாக உள்ளது.
இது குறித்து கடலூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கடலூர் செம்மண்டலம் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சுருக்கெழுத்து தட்டச்சு (ஆங்கிலம்), (தமிழ்) ஆகிய தொழிற்பிரிவுகளில் பி.சி., வகுப்பினருக்கான பணியிடம் காலியாக உள்ளது.
இந்த காலி பணியிடங்களில் பிளஸ் 2வில் தேர்ச்சி, இயந்திரப்பட வரைவாளர், கட்டடப்பட வரைவாளர், கம்மியர் (மின்னணுவியல்) ஆகிய தொழிற்பிரிவுகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி, துணி வெட்டுதல் மற்றும் தைத்தல் தொழிற்பிரிவில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.
இதற்கான நேரடி சேர்க்கை வரும் 31ம் தேதி வரை தினமும் (காலியிடங்கள் நிரம்பும் வரை) நடக்கிறது.
சேர விரும்புவோர் ஆண்டு கட்டணம் ரூ. ஆயிரத்து 345, விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 யுடன் அசல் சான்றிதழ்களை எடுத்து வரவேண்டும்.
துணி வெட்டுதல் மற்றும் தைத்தல் தொழிற்பிரிவில் சேர விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.