]]
Showing posts with label TNPSC. Show all posts
Showing posts with label TNPSC. Show all posts

Saturday, September 1, 2007

`குரூப்-1' தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய `குரூப்-1' தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி நடத்துகிறது

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், சிவந்தி அகாடமி சார்பில் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட துணை கண்காணிப்பாளர், வணிகவரி அலுவலர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர், கிராம வளர்ச்சி அலுவலக உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அதிகாரி போன்ற துறைகளில் உள்ள 172 காலிப்பணியிடங்களை குரூப்-1 தேர்வு மூலம் நிரப்ப உள்ளது.

இந்த தேர்வு முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய மூன்று கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. முதல் நிலை தேர்வு, 16-12-2007 அன்று நடைபெற உள்ளது.

முதல் நிலை தேர்வுக்கு மட்டும் திருச்செந்தூர், சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை அக்டோபர் மாதம் 25-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 28-ந்தேதி வரை நடத்த உள்ளது. இந்த வகுப்புகளுக்கான பயிற்சி கட்டணம் ரூ.2000 ஆகும்.

ஆதித்தனார் கல்லூரியின் பொருளியல் துறை பேராசிரியர் சி.ரமேஷ் பயிற்சி வகுப்புகளுக்கு இயக்குனராக செயல்படுவார்.

பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் ஆண்கள், ஆதித்தனார் கல்லூரி விடுதியிலும், பெண்கள் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி விடுதியிலும் தங்க அனுமதிக்கப்படுவார்கள். நாள் ஒன்றுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி கட்டணம் ரூ.50 ஆகும்.

விண்ணப்பம் பெபயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், விளக்க உரையும் விண்ணப்ப படிவமும் ரூ.40 செலுத்தி நேரிலோ அல்லது மணி ஆர்டர் மூலம் ரூ.50 செலுத்தி "சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, வீரபாண்டியன் பட்டணம், 628216, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்'' என்ற முகவரியில் செலுத்தி, பெற்றுக்கொள்ளலாம்.

மணியாடர் பாரத்தில் தகவலுக்கான இடம் பகுதியில் எந்த பயிற்சிக்கான விண்ணப்ப பாரம் என்றும், முகவரியை பின்கோடுடனும் தொலைபேசி எண்ணையும் தெளிவாக குறிப்பிடவேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் 30-9-07 ஆகும். விண்ணப்ப படிவத்துடன் ரூ.2000க்கான டிமாண்ட் டிராப்ட் (கனரா வங்கி, ஐ.ஓ.பி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து அனுப்பி பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

விடுதிக்கான தொகை ரூ.1750 பயிற்சி வகுப்பின் முதல் நாள் 25-10-07 அன்று செலுத்த வேண்டும்.

தொடர்புக்கு

இந்த பயிற்சி வகுப்புகள் சம்பந்தமாக மேலும் விபரம் பெற விரும்புவோர், சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எப்.லடிஸ்லாஸ் ரொட்ரிகோ எம்.ஏ.எம்.பில். அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் (அலுவலகம்) 04639-242998.

இந்த தகவலை, சிவந்தி அகாடமி அமைப்பாளர் ஆர். கிருஷ்ணகாந்தன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எப். லடிஸ்லாஸ் ரொட்ரிகோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tuesday, August 21, 2007

குரூப் - 1 பதவிக்கான தேர்வு

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) நடத்தும் குரூப் - 1 பதவிக்கான தேர்வு

தமிழக அரசுப் பணிகளில் முதன்மையான பணியான குரூப் 1 பணிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

பதவியின் பெயர் ( காலி இடங்கள் )

டெபுடி கலெக்டர் ( 30 )

டி.எஸ்.பி. ( 32 )

கமர்ஷியல் டேக்ஸ் ஆபிசர் ( 45 )

டெபுடி ரிஜிஸ்டிரர் - கூட்டுறவு சங்கம் ( 24 )

மாவட்ட பதிவாளர் ( 2 )

ஊரக வளர்ச்சித் துறையில் துணை ஆணையர் ( 29 )

மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ( 7 )

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் டிவிஷனல் ஆபிசர் ( 3 )

சம்பள விகிதம் : ரூ 8000 - ரூ. 13இ500

வயது வரம்பு : 1.7.2007 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும்.

விண்ணப்பப்படிவம் மற்றும் விபரங்களுக்கு

Controller of Examinations

Tamilnadu Public Service Commission
Omanthoorar Government Estate
Anna Salai
Chennai 600 002

கடைசி தேதி : 30 ஆகஸ்ட் 2007