]]

Monday, May 14, 2007

ஊர் அறிமுகம்


பண்முகங்களைக் கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஊர் பரங்கிப்பேட்டை. இவ்வூர் பரங்கிப்பேட்டை என்ற பெயரில் மட்டுமின்றி இன்னும் பல சிறப்புப் பெயர்களாளலும் சுட்டப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடித்தக்கது 'மஹ்மூதுபந்தர்' என்ற சிறப்புப் பெயராகும்.


மஹ்மூதுபந்தர்.


'பந்தர்" என்ற அரபுச் சொல்லுக்கு துறைமுகம் என்றுப் பொருள். பார்ஸியிலும் இதே வார்த்தைதான் துறைமுகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. முஹம்மதியர்கள் (முஸ்லிம்கள்) அதிகம் வாழும் இவ்வூர் சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் கப்பல் கட்டும் துறைமுகமாக விளங்கியது. இரும்பு உருக்கு ஆலையும் இங்கு இயங்கியுள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வாழும் துறைமுகமாக இது விளங்கியதால் 'மஹ்மூதுபந்தர்' 'முஹம்மதியர்கள் துறைமுகம்' என்ற காரணச் சிறப்புப் பெயரைப் பெற்றது.


போர்ட்டோநோவோ


உலக நாடுகளில் பிரபல்யமான ஒரு பெயரும் பரங்கிப்பேட்டைக்கு உண்டு. அது போர்த்துகீஸியர்களால் 'புதிய துறைமுகம்' என்று சூட்டப்பட்ட போர்ட்டோநோவோ (portonovo) என்றப் பெயராகும். பெயருக்கு ஏற்றார்போல தொழில் வளமிக்கதாக ஒரு காலத்தில் இந்த ஊர் விளங்கியது. தமிழகத்தில் முதலாவது இரும்பு தொழிற்சாலை 1678ல் இங்குதான் துவங்கப்பட்டது. இங்கு உருவாக்கப்பட்ட தரமான இரும்பு தண்டவாளங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின. இன்றைக்கும் சென்னை புகை வண்டி நிலையத்திலும், சிங்கப்பூர் விக்டோரியா ஹாலிலும் பரங்கிப்பேட்டையில் தயாரிக்கப்பட்டது என்று முத்திரையுடன் தண்டவாளங்கள் இருப்பதை இன்றைக்கும் பார்க்கலாம்.


இரண்டாவது உலகப்போர் வரை போர்ட்டோநோவோ துறைமுகம் சிறப்புடன் விளங்கியது. மலேஷியா, பர்மா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பரங்கிப்பேட்டைவாசிகள் வணிபம் செய்து வந்தனர் . இன்றைக்கும் பரவலாக அந்த நாடுகளில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த ஊர் கடலூர் சிதம்பரம் நெடுஞ்சாலையில் கடலூரிலிருந்து 30 கிமி,யிலும் சிதம்பரத்திலிருந்து 18 கிமி,யிலும் இணைந்து அங்கிருந்து பிரிந்து 6 கிமி உள்ளே சென்று கடற்கரை ஊராக அமைந்துள்ளது.


கடற்கறையில் சவுக்குத் தோப்புகளுக்கு மத்தியில் எழுந்து நிற்கும் 'லைட்ஹவுஸ்' எல்லோரையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது.


பரங்கிப்பேட்டை ஒரு அறிவியல் சுரங்கமான பூமி. இது கடல் வளம் நிறைந்த பூமியாக இருப்பதால் நீரோடைகள், ஆறுகள், குளங்கள் என்று நிறைந்த சதுப்புநில பூமியாகும் இது. இதன் காரணமாகவே கடல் ஆராய்சிக்கு 'அண்ணாமலைப் பல்கலைகழகம்' இந்த ஊரை தேர்ந்தெடுத்தது. மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்ட கல்விக்கூடம் இன்றைக்கு சேவாமந்திர் என்ற பெயரில் கல்விக் கூடமாக இயங்குகிறது.


கல்விக் கூடங்களின் வளர்ச்சியும் - தொழிற்வளர்ச்சியும் சமீபக்காலமாக குறிப்பிடத்தக்க விதத்தில் மாற்றம் அடைந்துள்ளதை குறிப்பிடலாம்.

0 comments: