]]

Saturday, May 26, 2007

கல்விக்குழு

அன்பிற்கினிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
பரங்கிப்பேட்டை மக்களின் கல்வி முன்னேற்றத்தினை பிரதான நோக்கமாக கொண்டு பரங்கிப்பேட்டை கல்விக் குழு துவங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் கல்விப் பிரிவாக இது செயல்பட்டுவரும். குறிப்பிடத் தகுந்த கல்விச் சாதனைகளோ அல்லது கல்வி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அமைப்புகளோ பரங்கிபேட்டையில் இல்லாமல் நிலவிவரும் வெற்றிடத்தை நிரப்பும்முகமாக இக்கல்விக் குழுவின் துவக்கம் அமைகிறது.
சமுதாய மாற்றத்தின் வேர் கல்வி வளர்ச்சியிலேயே உள்ளது என்று திடமாக நம்பும் இச்சிறு இளைஞர்கள் குழு தனது முதற்கட்ட செயல்பாடுகளாக, தற்போதைய தனது செயல்திறனுக்குட்பட்ட விஷயங்களையே கையிலெடுக்கிறது.
1. கல்விக்கூடங்களுக்கு சென்று கல்வியில் ஆர்வமற்றும், ஊக்கம் குறைந்தும் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களை கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கொள்ளவைத்தல் மற்றும் செயலூக்கம் (Motivation) பெற செய்தல்.
2. 10வது மற்றும் 102 மாணவர்களுக்கு அவர்களின் திறமை மற்றும் ஆர்வத்தின் அடிப்படையிலான கோர்ஸ்களை தேர்ந்த்ர்டுப்பதில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் வழிகாட்டுதல் ( Guidance & Counselling).
3. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பத்திரிக்கைகள் மற்றும் இணையத்தில் வரும் தகவல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை பரங்கிப்பேட்டையின் முக்கிய இடங்களில் கல்விக் குழு நோட்டீஸ் போர்டுகளின் மூலமாக பிரசுரிப்பது.
இது தவிர தொலைநோக்கு திட்டங்களாக, மாதமிருமுறை பள்ளிகளுக்குச் சென்று seminars எடுப்பது, மாணவர்களின் தனித்தன்மை மற்றும் திறன்களை பதிவுசெய்யும் வகையில் (Performance Tracking) ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு தனி கோப்பு(File) முறை, ஆசிரிய்ர் கூட்டமைப்பு மற்றும் கலந்துரையாடல், படித்த இளைஞர்களின் தகவல் தளம்(Database) முறையாக உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் போன்ற பல திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நம் முன்னோர்களை பார்த்து நாம் கேட்க எத்தனிக்கும் கேள்விகளை ந்மது சந்ததிகள் நம்மைப் பார்த்து கேட்டுவிடக்கூடாது என்ற பரிதவிப்பில் செய்யப்படும் இந்த எளிய முயற்சி வெற்றியடைய பிரார்த்திப்போம். சமூக சீர்திருத்தத்திற்கான இச்சிறு முயற்சிக்கு தங்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பினையும் மிகவும் எதிர்ப்பார்க்கிறோம். நேசத்துடன்

kalvikuzhu@yahoo.com

2 comments:

said...

பாராட்டத்தக்க முயற்சி.
இதில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் நம்பிக்கை தருகிறார்கள். ஊர் சென்ற போது எம்மிடமும் ஆதரவுக்கோரிக்கை வைத்தார்கள். கல்வி வளர்ச்சிக்கு வழிகாணத் துடிக்கும் இந்த எதிர்காலச் சிற்பிகளுக்கு வாழ்த்துகளுடன் எம்மாலியன்ற ஆதரவுக்கும் உறுதி அளித்தோம்.

said...

Assalaamu Alaikum Warah..

Ithu Romba nalla muyarchi.

Ennudaiya thaippatta aatharavum, aaloosanigalum eppavum undu.

Kalvi kuzhu sevai thodara Allahvidam dua saigindroom

Wassalaam

Moulavee Afzalul Ulamaa
A.B.Khaleel Ahmed Baaqavee M.A.,
Kuwait.