]]

Friday, June 1, 2007

அஞ்சல் அடையாள அட்டை எளிய வழி

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் போஸ்டல் அடையாள அட்டைப் பெறலாம்.

இந்தியக் குடி உரிமையை நிருபிக்கும் ஆவனங்களில் முக்கிய இடத்தை வகிப்பது வாக்காளர் அடையாள அட்டையாகும். பிற நுகர்வோர் அட்டை (ரேஷன் கார்ட்) மற்றும் பாஸ்போர்ட் போன்ற இன்னப்பிற அரசு அங்கீகாரம் உள்ள அடையாளங்களை நமது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும் வாக்காளர் அடையாள அட்டை அதில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் முயற்சிகள் அவ்வப்போது நடந்தாலும் அது முறையாக அனைத்து மக்களுக்கும் போய் இன்னும் சேரவில்லை.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பல சங்கடங்களை சந்திக்கிறார்கள். இதற்கு ஒரு மாற்றுவழியாகத்தான் போஸ்டல் அடையாள அட்டை பயன்படுகின்றது. போஸ்டல் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டால் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கும் வரை அந்த அட்டைக்குரிய அனைத்து தகுதிகளையும் போஸ்டல் அடையாள அட்டை உங்களுக்கு வழங்கும்.

இதற்கான செலவீனமும் மிக குறைவாகும். அதிகப்பட்சமாக இருபது நாட்களுக்குள் இந்த அடையாள அட்டை வழங்கப்படும். இதில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பிரிண்ட் எடுத்து உரிய விபரங்களை பூர்த்தி செய்து உரிய தபால் தலை ஒட்டி போஸ்ட் ஆபிஸில் கொடுத்தால் மேற்கொண்ட விபரங்களை அவர்கள் உங்களிடமிருந்துப் பெற்றுக் கொள்வார்கள்.
அதற்கான படிவத்தை இந்த இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்

http://infopno.googlepages.com/DEPARTMANTOFPOSTS.doc

0 comments: