]]

Saturday, June 30, 2007

சிதம்பரம் தாலுகாவில் 33 வங்கிகளுக்கு வரும் 7ம் தேதி கூட்டுறவு சங்க தேர்தல்

சிதம்பரம் தாலுகாவில் 33 வங்கிகளுக்கு வரும் 7ம் தேதி கூட்டுறவு சங்க தேர்தல்

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தாலுகா பகுதிகளில் உள்ள 33 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு அடுத்த மாதம் 7ம் தேதி கூட்டுறவு சங்க தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் வரும் ஜூலை மாதம் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. அதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு துரிதமாக செய்து வந்தது.

மேலும் வரும் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நான்கு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 274 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

அதையொட்டி கடந்த இரண்டு மாதங்களாக அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் செய்து வந்தனர். முதல் கட்டமாக சிதம்பரம் தாலுகா பகுதியில் உள்ள 33 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு அடுத்த மாதம் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கூட்டுறவு சங்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதையொட்டி தேர்தல் நடத்துவதற்கு ஓட்டு பெட்டிகள், தேர்தல் நடக்கும் இடம், தேர்தல் அதிகாரிகள் நியமித்தல், ஓட்டளிக்க முத்திரை உள்ளிட்ட அனைத்து பணிகளும் தற்போது தயார் நிலையில் உள்ளன.

கூட்டுறவு சங்கங்களில் போட்டியிட அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அடுத்த மாதம் 2ம் தேதி வேட்பு மனு வாங்கப்படுகிறது. 3ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற்று கொள்ள கடைசி நாளாகும். 7ம் தேதி தேர்தல் நடக்கிறது.

நம் கருத்து: இது மாதிரியான தேர்தல்களில் அரசியல்வாதிகளின் ஆதிக்கம்தான் அதிகமாக காணப்படும். பொதுமக்களும் பங்கெடுக்க முன் வர வேண்டும். தன்னார்வ தொண்டு அமைப்புகள் இது குறித்த விழிப்புணர்ச்சியை நம் நகர மக்களுக்கு ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும்.

0 comments: