]]

Saturday, June 30, 2007

சென்னை - நாகூர் இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்

தென்னக ரெயில்வே சார்பில் சென்னை - நாகூர் இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விடப்படுகின்றன.

தெற்கு ரெயில்வேயில் இந்த ஆண்டு 7 புதிய ரெயில்கள் விடப்படுகின்றன. அவற்றில் சென்னை - நாகூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்று. அதன் விபரம் வருமாறு:-

சென்னை எழும்பூர்- நாகூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்:-

6775- சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு நாகூர் சென்று சேரும்.

6776- நாகூரில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். (விழுப்புரம்-மயிலாடுதுறை அகலப்பாதை பணி முடிந்ததும் ரெயில் இயக்கப்படும்).


தென்னக ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நம் கருத்து:

ஏற்கனவே நம் பரங்கிப்பேட்டை மார்க்கமாக செல்லும் பல ரெயில்கள் நம் பரங்கிப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. தினந்தோறும் பல பயணிகள் ரெயில் மூலம் நம் நகருக்கு வருகை தருகின்றார்கள். பரங்கிப்பேட்டை என்று பயணச்சீட்டு கேட்டாலும் பல ரெயில் நிலையங்களில் கிடைப்பதில்லை. சிதம்பரம் அல்லது கடலூர் துறைமுகம் போன்ற நகரங்களுக்குத்தான் டிக்கட் கிடைக்கின்றது. தற்போது அகலப்பாதை பணிகளும் முடிவடைய இருப்பதால் நம் நகர மக்கள் சாதி, மத, கட்சி வேறுபாடின்றி சேர்ந்து போராடினால் நம் நகருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ரெயில் நிலைய விரிவாக்கம், விரைவு ரெயில்கள் நின்று செல்வது, பரங்கிப்பேட்டை என அச்சடித்த டிக்கட் கிடைப்பது போன்ற செயல்திட்டங்கள் நடைமுறைக்கு வரும்.

பல நகரங்களின் போராட்டங்கள் நம் கண்கள் முன் நிழாடுவதையும், அவற்றால் ஏற்பட்ட வெற்றிகளையும் நாம் மறந்து விடக்கூடாது.

பூனைக்கு மணி கட்டபோவது யார்?

0 comments: