]]

Thursday, June 14, 2007

கடலுர் மாவட்டத்தில் கல்வி உதவித் தொகைக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுர் மாவட்டத்தில் கல்வி உதவித் தொகைக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுர் : கடலுர் மாவட்டத்தில் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் சீர்மரபினர் மாணவ, மாணவிகளிடமிருந்து கல்வி உதவித் தொகைக்கு விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுர் மாவட்டத்தில் அரசு மற்றும் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்பட்ட, மிகவும்பிற்பட்ட சீர்மரபினர் மாணவ, மாணவிகளிடமிருந்து 20072008க்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் உரிய படிவத்தில் கல்வி நிலையங்கள் மூலம் வரவேற்கப் படுகின்றன. இதற்கு பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு இது பொருந்தாது. 3 வருட இலவச பட்டப்படிப்பு பயில பிற்பட்ட மாணவர்களுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமலும் அவரது குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என தகுதி இருந்தால் அவர்கள் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் ஆவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற தகுதி இருந்தால் போதும். அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் தொழில் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமலும், பட்டதாரி எவரும் இல்லை என்ற தகுதியும் வேண்டும். சுய நிதி கல்வி கல்லுõரிகளில் அரசு கல்லுõரிக்கு வரையறுக்கப்பட்ட கட்டணங்கள் பெற்று மாணவர்களுக்கு வழங்க தகுதியுடையவராவார். மாணவர்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் அடிப்படையில் அந்தந்த கல்வி நிறுவனத் தலைவர் அனுப்பும் உதவித் தொகை கோரும் பட்டியல்களில் உரிய சான்றொப்புடன் வரப் பெற்றதும் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஒப்பளிப்பு செய்யப் படும். கல்வி உதவித் தொகை கோரப்படும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பள்ளிகளிலிருந்து 30.6.07க்குள்ளும், கல்லுõரி மற்றும் இதர நிறுவனங்களிலிருந்து 31.7.07க் குள்ளும், புதிய விண்ணப்பங் கள் பள்ளிகளிலிருந்து 31.7.07க்குள்ளும், கல்லுரி மற்றும் இதர நிறுவனங்களிலிருந்து 31.8.07க்குள்ளும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments: