]]

Saturday, June 30, 2007

ஒன்றாம் தேதி முதல் ஹெல்மெட் அணிய வேண்டும்

ஒன்றாம் தேதி முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் - எஸ்.பி.,பிரதீப்குமார் தகவல்

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வரும் ஜூலை முதல் தேதி முதல் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என கடலூர் எஸ்.பி., பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.


இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மாநகராட்சிகளில் இந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்கள், சில தொண்டு நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று, அரசு இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்துச் செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஜூலை முதல் தேதி முதல் நகராட்சி மற்றும் கிராமப்புறங்களிலும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுவது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தது.

இதன்படி கடந்த ஒருமாதமாக கடலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி, போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இது குறித்து கடலூர் எஸ்.பி., பிரதீப்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:


வரும் ஜூலை முதல் தேதி முதல் ஹெல்மெட் அணிவது குறித்து சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்படும்.

இந்த சட்டத்தை அமுல்படுத்துவதில் பொதுமக்களுக்கு தொந்தரவு தர மாட்டார்கள். ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் வாகன சோதனை செய்யும் போது இன்ஸ்பெக்டர் அல்லது சப் இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரிகளை கொண்டுதான் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 comments: