]]

Monday, June 18, 2007

தமிழ்மணத்தில் இணைந்தோம்

தமிழ்மணத்தில் இணைந்தோம்

வலைஞர்கள் அனைவருக்கும் தமிழ் மணம் பற்றித் தெரிந்திருக்கும். தமிழ்வலைப்பூ உலகில் தன்னிகரில்லா இடத்தில் நிற்கும் வலையுலகம் தமிழ்மணம். வலைப்பூக்கள் சங்கமிக்கும் இடமான தமிழ்மணத்தில் நமது வலைப்பூவும் இணைந்துள்ளது.

இதில் நாம் இணைந்ததன் வழியாக நமது கருத்துக்களை மிக இலகுவாகவும் எளிமையாகவும் உலகஅளவில் உள்ள தமிழ் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றுவிட முடியும். நமது வலைப்பூவில் புதிதாக பதிவேற்றம் செய்யப்படும் கட்டுரைகளை தானியங்கியாக தமிழ்மணத்தின் முதல் பக்கம் எடுத்துக் கொள்ளும். இதைப் படிப்பவர்கள் கட்டுரைகளில் பின்னூடல் இட்டால் அந்தக் கட்டுரை மீண்டும் தமிழ் மணத்தின் முதல் பக்கத்தி்ற்கு வந்து விடும்.

பல பின்னூடல்களைப் பெறும் கட்டுரை தொடர்ந்து தமிழ் மணத்தின் முதல் பக்கத்தில் நீண்ட பொழுதுகள் நிலைப் பெறும்.

எனவே நமது இணைய உறுப்பினர்கள் தொடர்ந்து பயனுள்ள கட்டுரைகளை பதியுங்கள். புதிதாக பதிக்கப்படும் கட்டுரைகளைப் படித்து அதில் பின்னூட்டம் இடுங்கள்.

நாம் தமிழ்மணத்தில் இணைந்ததன் மூலம் நமது கட்டுரைகளை - பின்னூடல்களை ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சென்று விடலாம்.

பரங்கிப்பேட்டைப் பற்றிய தகவல்கள் ஒன்றும் அப்டேட் ஆகவில்லை. ஏற்கனவே 'கல்வியாளர்களைக் கண்டெடுப்போம்' என்று ஒரு பதிவிட்டோம். அதற்கும் இதுவரை யாரும் பதிலளிக்கவில்லை.

சகோதரர் கலீல் பாகவி அவர்கள் பிற பத்திரிக்கை செய்திகளில் மிக்க பலனுள்ளவற்றை தொகுத்து தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்து வருகிறார்.
பரங்கிப்பேட்டைப் பற்றிய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1 comments:

said...

அன்பிற்குரிய பரங்கிப்பேட்டை வலை சகோதரர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நம் வலைப்பக்கம் 'தமிழ் மணம்' தொகுப்புகளில் இடம்பெற்ற செய்தி மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. எல்லாப்புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே...!

இதன் மூலம் நம் கடமைகள் அதிகமாகிவிட்டதை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. காரணம், இனிமேல் நம் வலைப்பக்கத்தில் இடம்பெறக்கூடிய செய்திகள் அனைத்தும் உலகளவில் வாழும் தழிழறிந்த அனைத்து சகோதர, சகோதரிகளின் பார்வைக்கும் செல்லும். இந்த நல்ல சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொண்டு நம் ஊரின் வரலாற்றை, நம் நகரில் வாழ்ந்த / வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற சாதனையாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி வைப்பது நமது கடமை என்பதை மறந்துவிடக்கூடாது. அதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

உலகெங்கும் வாழும் நம் நகர மக்கள் நாம் வாழும் ஊரின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

என்றும் மாறா அன்புடன்....

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ.,

மின்னஞ்சல்கள் : abkaleel@gmail.com / khaleel_baaqavee@yahoo.com / abkaleel@yahoo.com

வலைப்பக்கம்: khaleel-baaqavee.blogspot.com