]]

Sunday, June 24, 2007

அரசு பள்ளிகளில் இனி வாரம்தோறும் ஆய்வு

அரசு பள்ளிகளில் இனி வாரம்தோறும் ஆய்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க கலெக்டர் முடிவு

கடலுõர்:
அரசு பள்ளி மற்றும் கல் லுõரி, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு பிரிவிலும் மாணவர் சேர்க்கையின் போது ஒதுக்கீட்டின்படி அமல்படுத்த வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கடலுõர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லுõரி மற்றும் பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படும் விடுதி காப்பாளர்களின் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுõரி, பள்ளிகள் அரசு ஒதுக்கீடு செய்து அறிவித்த சதவீதப்படி பிரிவு வாரியாக தேர்வு செய்ய வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்.
  • பெரும்பாலான பள்ளி, கல்லுõரிகளில் கம்ப்யூட்டர், வணிகவியல் பாடத்திற்கு அதிக போட்டி உள்ளது. இது போன்ற பாடங்களில் முக்கிய கவனம் செலுத்தி ஒதுக்கீட்டின்படி கண்டிப்பாக இருக்க வேண்டும்.
  • பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆகியன மாணவ, மாணவிகளின் வாழ்க்கையின் திருப்புமுனை என்பதால் அவர்களுக்கு நல்ல வசதிகளுடன் விடுதியில் சூழ்நிலையை ஏற்படுத்துவதுடன், மாதம் தோறும் தேர்வையும், தனியார் பள்ளிகளைபோல் பாடத்திட்டத்தில் பயிற்சியும் வழங்க வேண்டும்.
  • அரசு பள்ளிகளில் வாரம் தோறும் ஆய்வு செய்ய உள்ளேன். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சரியாக கொடுக்காத அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
  • சிலரின் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.மேலவன்னியூர் ஆதிதிராவிடர் பள்ளிபோன்று மற்ற ஆதிதிராவிடர் பள்ளிகளிலும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளிகளில் குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்பட்டால் ஆசிரியர்களை நியமித்து கலெக்டரின் தனி ஒதுக்கீட்டிலிருந்து ஊதியம் வழங்கப்படும்'' என தெரிவித்தார்.

0 comments: