]]

Saturday, June 23, 2007

பல்கலை தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை

பல்கலை தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
சான்றிதழ் படிப்புகள், பட்டயப் படிப்புகள், முதுநிலை பட்டயப் படிப்புகள், இளங்கலை பட்டப் படிப்புகள், முதுநிலை பட்டப் படிப்புகள் ஆகியவற்றில் சேர்ந்து படிக்கலாம். மாணவர் சேர்க்கை மையங்களில் கல்வி கட்டணத்தை செலுத்தியதும் பாடங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மாணவர் சேர்க்கை மையங்கள், சென்னையில் நான்கு இடங்களிலும், திருச்சி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரையில் இரண்டு இடங்களிலும், மேலுõர், திருமங்கலம், சிவகாசி, தென்காசி, நெல்லை, நாகர்கோவில், தர்மபுரி, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களிலும் செயல்படுகின்றன. இந்த மையங்களில் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்து விரும்பும் படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என தொலை நிலைக்கல்வி இயக்குனர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

0 comments: