]]

Saturday, June 23, 2007

கடலுõர் பெண்கள் ஐ.டி.ஐ.,யில் தொழிற் பிரிவுகளுக்கு பயிற்சி

கடலுõர் பெண்கள் ஐ.டி.ஐ.,யில் தொழிற் பிரிவுகளுக்கு பயிற்சி

கடலுõர் : ஆங்கிலம் மற்றும் தமிழ் சுருக்கெழுத்து, தட்டச்சு உள்ளிட்ட தொழிற்பிரிவுகளுக்கு மகளிர் ஐ.டி.ஐ.,யில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து அரசு மகளிர் ஐ.டி.ஐ.,முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலுõர் செம்மண்டலத்தில் உள்ள அரசு பெண்கள் ஐ.டி.ஐ., யில் வேலைவாய்ப்புள்ள பல தொழில் பிரிவுகளில் பெண்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் சுருக்கெழுத்து, தட்டச்சு, கம்ப்யூட்டர் இயக்குபவர், திட்டமிடுதல் உதவியாளர் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும்,
கட்டட வரைவாளர், இயந்திரப் பட வரைவாளர், கம்மியர் மின் அணுவியல், தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள் பராமரிப்பு ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றவர்களும்,
துணி வெட்டுதல் மற்றும் தையல் வேலை தொழிற்பிரிவுகளுக்கு குறைந் தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதியின் அடிப்படையில் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும்.
சுருக்கெழுத்து, தட்டச்சு பிரிவில் தற்போது கம்ப்யூட்டர் பயிற்சியும், பேக்ஸ், ஜெராக்ஸ் போன்ற அலுவலக உபகரணங்களை இயக்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
துணி வெட்டுதல், தையல் தொழிற் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், கண்டிப்பாக 8ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகலை இணைக்க வேண்டும். பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் ரூ.50க்கு வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 6ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.

0 comments: