]]

Sunday, July 29, 2007

விளையாட்டு துறையில் சிறந்த பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு

விளையாட்டு துறையில் சிறந்த பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு துறையில் சிறப்பாக சேவை செய்து வரும் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. இதற்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி பத்மநாபன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-


முதல்-அமைச்சர் விருது

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டில் சிறப்பான சேவை செய்துவரும் மிகச்சிறந்த பயிற்றுனர்கள் 2 பேர் மற்றும் 2 உடற்கல்வி ஆசிரியர்கள் அல்லது இயக்குநர்கள் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் முதல்-அமைச்சர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.


அது போல இந்த ஆண்டும் விளையாட்டில் சிறப்பான சேவை செய்துவரும் மிகச்சிறந்த 2 பயிற்றுநர்களுக்கும் மற்றும் 2 உடற்கல்வி ஆசிரியர்கள் அல்லது இயக்குநர்களுக்கும் ரூ.1 லட்சம் மற்றும் முதல்-அமைச்சர் விருது வழங்கப்பட உள்ளது.

எனவே விளையாட்டு துறையில் சிறப்பான சேவை புரிந்துள்ள பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் விண்ணப்பிக்கலாம்.


கடைசி நாள்

இதற்கான விண்ணப்பத்தை கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உறுப்பினர்-செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எண் 116-ஏ, ஈ.வெ.ரா.பெரியார் சாலை, சென்னை 84 என்ற முகவரிக்கு வரும் நவம்பர் 1-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


மேலும் இது பற்றிய விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவரை சந்தித்து தெரிந்து கொள்ளலாம்.

இது தவிர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தள முகவரியிலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments: