]]

Saturday, July 28, 2007

இன்னும் 4 நாட்களே உள்ளன

இன்னும் 4 நாட்களே உள்ளன
வருமான வரி கணக்கை பதிவு தபால் மூலம் தாக்கல் செய்யலாம்
முதன்மை ஆணையர் தகவல்

வருமான வரி கணக்கை பதிவு தபாலிலும் தாக்கல் செய்யலாம் என்று வருவாய் துறை முதன்மை ஆணையர் சி.ஆர்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.


மாத சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வசதியாக நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள வருமான வரி தலைமை அலுவலகத்தில் 40 சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த சிறப்பு கவுண்ட்டர்களை வருமான வரித் துறை முதன்மை ஆணையர் சி.ஆர். ரவிச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-


மாத சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜுலை 31-ந் தேதி கடைசி நாளாகும். வருமான வரி தாக்கல் செய்வதற்கு காலநீட்டிப்பு கிடையாது.

கடைசி சில நாட்களில் ஏராளமான பேர் வருவார்கள் என்பதால் 40 சிறப்பு கவுண்ட்டர்கள் திறந்துள்ளோம்.

தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக தனியாக 8 கவுண்ட்டர்கள் உள்ளன. இவற்றில் 300 பேர் பணியாற்றுகின்றனர்.


இந்த கவுண்ட்டர்கள் சனி, ஞாயிற்றுக்கிழமையும் திறந்திருக்கும். 31-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும்.

மூத்த குடிமக்கள், ஊனமுற்றோருக்கு தனி கவுண்டர்கள் உள்ளன. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களின் `பான்' நம்பரை சரிபார்க்க தனி கவுண்ட்டர் இயங்குகிறது.

கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னதாகவே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

கடைசி நாளில் நெரிசலில் சிக்கி, நீண்டகிïவில் காத்திருந்து சிரமப்பட வேண்டாம்.

இங்கு வரும் மக்கள் வசதிக்காக குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளோம். உரிய கட்டணம் செலுத்தினால் சாப்பாடும் கிடைக்கும். சிறப்பு கவுண்டர்கள் செயல்படும் 5 நாட்களில் 2 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வார்கள்.


கடந்த ஆண்டு வருமான வரித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் தபால் நிலையத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்திருந்தோம்.

இதற்காக தபால் துறைக்கு கட்டணம் செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே, அனைவரும் சிறப்பு கவுண்டëடர்களிலே வருமான வரி தாக்கல் செய்துவிடலாம்.

வெளியூரில் இருப்பவர்கள் பதிவு தபால் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம். அவ்வாறு யாராவது அனுப்பினால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அந்த தபாலை அனுப்பி வருமான வரி தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.


இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.


வருமான வரி அலுவலகத்திற்கு நேற்று மக்கள் ஆர்வமாக வந்து வருமான வரி கணக்கை சிரமமின்றி தாக்கல் செய்துவிட்டு சென்றனர்.

வருமான வரி கணக்கை சிறப்பு கவுண்ட்டர்களில் எப்படி தாக்கல் செய்ய வேண்டும் என்பது பற்றி மைக் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் அறிவிப்பு செய்கின்றனர்.

10 படிவத்திற்கு மேல் தாக்கல் செய்ய வருபவர்களுக்காக (பல்க் பைலிங்) கலையரங்கத்தில் தனியாக கவுண்ட்டர் அமைக்கப்பட்டு உள்ளது.

நேற்று ஒரு நாள் மட்டும் 24 ஆயிரம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

0 comments: