]]

Saturday, July 28, 2007

ஜெர்மன் மொழி கற்றுத்தர 6 மையங்கள் துவக்கம்

ஜெர்மன் மொழி கற்றுத்தர 6 மையங்கள் துவக்கம்

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழகம், ஜெர்மன் கலாசார மையமான கோதே இன்ஸ்டிடியூட் இணைந்து ஜெர்மன் மொழியை தமிழகத்தில் கற்றுத் தர புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இது குறித்து இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜ சேகரன் பிள்ளை கூறியதாவது:


தொலை தூரக் கல்வி மூலம் ஜெர்மன் மொழி பாடப் பிரிவு(கோர்ஸ்) தமிழக இளைஞர்களுக்காக கோதே இன்ஸ்டிடியூட் மூலம் கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது.

இது இன்ஜினியரிங், மருத்துவம், ஐ.டி., படித்தவர்களுக்கு உதவியாக அமையும். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லையில் இதற்கான மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.


தொலை தூரக் கல்வித் திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 18 வயதிற்குட்பட்ட, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

"சிடி' க்கள், பதிவு செய்யப்பட்ட ரேடியா, நூல்கள் வழி பயிற்சியும், வகுப்பறை பயிற்சியும் அளிக்கப்படும். ஜெர்மன் மொழிப் பாடத்திற்கான முதல் வகுப்பு வரும் அக்டோபர் 2007 முதல் ஜூன் 2008 வரை நடைபெறும்.

இவ்வாறு ராஜசேகரன் பிள்ளை தெரிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழக மண்டல தலைவர் சீனிவாசன், கோதே இன்ஸ்டிடியூட் நிர்வாகிகள் சதந்தி ஹோஷ், லண்ட் வேர், முல்லர், ரேணு பாத்விதரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments: