]]

Thursday, July 12, 2007

பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி - புதிய நிர்வாகிகள்

பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி புதிய நிர்வாகிகள்

வரலாற்று புகழ் மிக்க பரங்கிப்பேட்டை பெருநகரில் சுமார் 13க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்(மஸ்ஜிது)கள் உள்ளன. (அனைத்து பள்ளிவாசல்கள் பற்றிய விபரங்கள் கூடிய விரைவில்... இன்ஷா அல்லாஹ...)

அவற்றில் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி மற்றும் புதுப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிவாசல்களில் மட்டும் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையான ஜும்ஆ தொழுகை நடைபெறுகின்றது.


ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி நிர்வாகக்குழுவில் 5 முத்தவல்லி (பள்ளிவாசல் தலைவர்)கள் இடம்பெறுவார்கள். இவர்களின் நிர்வாகக் காலம் 5 ஆண்டுகள். ஓவ்வொரு வருடமும் சுழற்சி முறையில் ஒவ்வொருவரும் முத்தவல்லியாக இருப்பர்.


அந்த வகையில் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி முத்தவல்லிகளின் நிர்வாகக் காலம் நிறைவு பெற்றதையொட்டி, புதிய முத்தவல்லிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை பொதுக்குழு ஒப்புதலுடன் தேர்வுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தக் குழுவில் பரங்கிப்பேட்டையிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுடைய முத்தவல்லிகளும், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரும் இடம்பெற்றனர்.


அக்குழு ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி நிர்வாகத்திற்கான புதிய முத்தவல்லிகளை தமிழ்நாடு வஃக்ப் வாரிய அதிகாரியின் ஒப்புதலுடன் கீழ்க்கண்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து கொடுத்தது.


K. சேக் அப்துல் காதர் மரைக்காயர் @ நவாப் ஜான், மீராப்பள்ளி தெரு

I. இஸ்மாயில் மரைக்காயர், வாத்தியாப்பள்ளி தெரு

B. பசீர் அஹமது, தெசன் தைக்கால் தெரு

மவ்லவீ காரீ ஹாஃபிழ் H. அப்துஸ் ஸமத் ரஷாதி, கவுஸ் பள்ளி தெரு

A. முஹம்மத் ஆரிஃப், ரேவுமைன் தெரு

நன்றி : www.parangipettai.com

0 comments: