]]

Wednesday, July 11, 2007

சுயஉதவிக்குழு செயல்பாடுகள் குறித்து தவறான தகவல்

சுய உதவிக்குழு செயல்பாடுகள் குறித்து தவறான தகவல்

தொண்டு நிறுவனங்கள் மீது கலெக்டர் திடீர் பாய்ச்சல்

பரங்கிப்பேட்டை: சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்து தவறான தகவல்களை தொண்டு நிறுவனங்கள் தருகின்றன என கலெக்டர் ராஜேந்திர ரத்னு தெரிவித்தார்.


பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு நாள் பயிற்சி பரங்கிப்பேட்டையில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் கிள்ளை ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜம்பு நாதன் வரவேற்றார்.

கலெக்டர் ராஜேந்திர ரத்னு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது:


கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இருந்தும் வருமானம் தரும் தொழிலாக தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். இங்கு சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள், அரிசிக்கடை, மளிகை கடை, மீன் வியாபாரம், கருவாடு வியாபாரம் செய்வதாக கூறுகின்றனர். அவர்கள் நல்ல முறையில் செயல்படவேண்டும். சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து தொண்டு நிறுவனங்கள் தவறான தகவல்களை தருகின்றனர்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.


நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள் சேவியர் அமலதாஸ், ஜோதி மாணிக்கம், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன், சிதம்பரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ராமச்சந்திரன், வங்கி ஆய்வாளர் விநாயகசுந்தரம், கூட்டுறவு வங்கி செயலாளர்கள் சக்கரபாணி, தமிழ்ச் செல்வன், கவுன்சிலர்கள் பாவாஜான், நடராஜன், செந்தில்குமார், பசிரியாமா, ராமலிங்கம், பரங்கிப்பேட்டை வி.ஏ.ஒ., அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடலூர் சமுதாய ஒருங்கிணைப்பாளர் சுனில் நன்றி கூறினார்

0 comments: