]]

Wednesday, July 11, 2007

நலிவடைந்த கலைஞர்கள் நிதியுதவி இலவச விண்ணப்பங்கள் விநியோகம்

நலிவடைந்த கலைஞர்கள் நிதியுதவி

இலவச விண்ணப்பங்கள் விநியோகம்

கடலூர் மாவட்டத்தில் நலிவடைந்த கலைஞர்கள் நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இது குறித்து கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு:

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஆண்டு தோறும் வழங்கும் நிதியுதவி திட்டத்தின் கீழ் இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமிய கலைகள் மற்றும் ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளை தொழிலாக கொண்டு பணியாற்றி 58 வயதுக்கு மேற்பட்ட நலிவடைந்த கலைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இந்த நிதி ஆண்டில் (2007-08) நலிவடைந்த கலைஞர்களுக்கு நிதி உதவி பெறுவதற்காக விண்ணப்பங்கள் தற்போது இலவசமாக வழங்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பொன்னி, 31 குமாரசாமி ராஜா சாலை, சென்னை-20 என்ற முகவரியில் நேரிடையாக பெற்று கொள்ளலாம்.


வெளியூரில் உள்ள கலைஞர்கள் விண்ணப்பம் கோரும் வேண்டுகோள் கடிதத்துடன் ரூ.10க்கான தபால் தலை ஒட்டிய சுய முகவரியிட்ட உறையுடன் வரும் 31ம் தேதிக்குள் மன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.


கடலூர் மாவட்டத்தில் நிதியுதவி பெற விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப் பங்களை வட்டாச்சியர் மற்றும் கோட்டாச்சியர் அல்லது சார் ஆட்சியர் பரிந்துரைகளுடன் விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களுடன் அக்டோபர் 1ம் தேதிக்குள் மன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments: