]]

Wednesday, July 11, 2007

மசூதிகளில் வக்ப் வாரியத்தின் சொத்து பட்டியல்

மசூதிகளில் வக்ஃப் வாரியத்தின் சொத்து பட்டியல்

தமிழகம் முழுவதும் உள்ள வக்ஃப் வாரியத்தின் சொத்து விவரங்களை அந்தந்தப் பகுதி மசூதி, தர்கா மற்றும் தைக்காக்களில் நோட்டீஸ் போர்டுகளிலும் எழுதி வைக்க முடிவு செயயப்பட்டுள்ளது.

இதுகுறித்து வக்ப் வாரியத்தின் தலைவர் ஹைதர் அலி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வக்ஃப் வாரியம் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை அனுப்பி வருகிறது. வக்ஃப் வாரியத்தின் www.tnwakfboard.org என்ற இணையத் தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொத்து விவரம் வெளியிடப்படும்.

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புக்கு உள்ளான வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான இடங்கள் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 943 வழக்குகள் பதிவு செய்யப்பட்டள்ளன. தமிழகத்தில் வக்ப் வாரியத்திற்கு 34,000 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 24,68,558 அடி ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளது.

தமிழக அரசும் வக்ஃப் வாரியத்தின் சொத்து குறித்து கணக்கெடுத்து வருகிறது.

வக்ஃப் வாரியத்திற்காக சென்னையில் கணினி வசதியுடன் கூடிய அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என்றார்.

1 comments:

said...

வக்பு வாரியத்தின் புதிய தலைமையின் நடவடிகைக்கு வாழ்த்துக்கள். இறையில்லத்தின் சொத்து விபரங்களை ஜமாத்தினரின் பார்வைக்கு கொண்டு வருவதன் மூலம் - இறையில்லத்திற்கு நிலையான வருமானம் எவ்வளவு என்பதையும் - அதிலிருந்து பராமரிப்பு செலவு போக எவ்வளவு மிச்சமாகிறது என்பதையும் அறிந்துகொள்ள அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. வக்பு சொத்து சூரையாடல்-சுருட்டல் பேர்வழிகளுக்கு சாவு (மௌத்து) மனியடிக்கும் வக்பு வாரியத்தின் ஆணையை நிறைவேற்ற முஸ்லிம்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.