]]

Saturday, July 14, 2007

தமிழகத்தின் மூத்த உலமா முஹம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத் அவர்கள் வஃபாத்

தமிழகத்தின் மூத்த உலமா
முஹம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத் அவர்கள்
வஃபாத்

தமிழகத்தின் மூத்த உலமாக்களில் ஒருவரும், லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முதல்வருமான மௌலவி முஹம்மது ஜக்கரிய்யா ஹஜ்ரத் அவர்கள் 13.07.07 வெள்ளிக்கிழமை காலை மரணமடைந்தார்கள் (இன்னா லில்லாஹி...).

அவர்களுக்கு வயது 85.

லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் முதன் முதலாக "மன்பயி" பட்டம் பெற்றவர் இவர்கள்தான்.

1947 ஆம் ஆண்டு இவர்கள் பட்டம் பெற்றார்கள்.

1948 ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரியின் ஆசிரியராக பணியாற்றினார்கள்.

1977 ஆம் ஆண்டு இக்கல்லூரியின் முதல்வராக பணியேற்றார்கள்.

இவர்கள் மிகவும் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்தார்கள்.

யாரிடமும் தமது சொந்தத் தேவைகளுக்காக கூட பணம் கேட்டதில்லை.

இவர்கள் நீண்டகாலமாக ஜமாத்துல் உலமா சபையின் தலைவராக பணியாற்றி உள்ளார்கள்.

அன்னாருடைய ஜனாஸா தொழுகையில் பெருந்திரளான உலமா பெருமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டு, அன்னாரின் மறுமை வெற்றிக்காக அழுது பிரார்த்தனை செய்தது கலந்து கொண்டோர் அனைவரின் உள்ளங்களையும் கரைய வைத்தது.

பரங்கிப்பேட்டை பெருநகரிலிருந்தும் பலர் அன்னாரின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டனர்.

0 comments: