]]

Friday, July 13, 2007

தொழில்நுட்ப தேர்வுக்கு 16 ல் விண்ணப்பம்

தொழில்நுட்ப தேர்வுக்கு 16 ல் விண்ணப்பம்

தையல், ஓவியம் உள்ளிட்ட அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள், வரும் 16ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஓவியம், தையல், இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகியவற்றுக்கான தொழில்நுட்பத் தேர்வுகள், வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது.

கீழ்நிலை, மேல்நிலை ஆகிய இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும்.

கீழ்நிலை தேர்வு எழுதுபவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேல்நிலை தேர்வு எழுதுபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் பயின்று இடைநிலைப் பள்ளி இறுதிச் சான்றிதழோ அல்லது அதற்கு சமமான சான்றிதழோ பெற்றிருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள், வரும் 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை வழங்கப்படும்.

முதன்மைக் கல்வி அலுவலகங்கள், தேர்வுத்துறை இயக்குனரகம், அரசுத் தேர்வுகள் மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வுக் கட்டணமாக, நடனப் பிரிவிற்கு கீழ் நிலையாக இருந்தால் ரூ.57 ம், மேல்நிலையாக இருந்தால் ரூ.62 ம் செலுத்த வேண்டும். இசைப் பிரிவிற்கு முறையே ரூ. 27, ரூ.37 வீதமும், மற்ற பாடங்களுக்கு முறையே ரூ.37, ரூ.47 என்ற வீதத்திலும் செலுத்த வேண்டும்.

கட்டணத்தை, கருவூல ரசீது மூலம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

0 comments: