]]

Tuesday, July 3, 2007

இந்திய விமானப்படை பணிகள்

இந்திய விமானப்படைக்கு திடகாத்திரமான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்


இந்திய விமானப்படையின் குரூப் எக்ஸ் டிரேடில் சேர திடகாத்திரமான, திருமணமாகாத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ள இளைஞர்கள்...

  • 1.7.1986 முதல் 30.9.1990க்குள் பிறந்திருக்க வேண்டும்.

  • 152 செ.மீ., மார்பளவும் (விரிவாக்கம் 5 செ.மீ.,),

  • கண்பார்வைத் திறன் கண்ணாடி இன்றி 6/36ம், கண்ணாடியுடன் 6/9ம் இருக்க வேண்டும்.

  • பிளஸ் 2ல் இயற்பியல், கணக்கு பாடங்களில் 50 சதவீத மார்க் பெற்றிருக்க வேண்டும். அல்லது பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி படித்து ஏதாவது ஒன்றில் 50 சதவீதம் மார்க் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • தேர்வுக்கு வரும்போது கல்வித் தகுதி சான்றிதழ்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட ஏழு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், முன்னாள் படைவீரர் மகன் எனில் அதற்கான சான்றிதழ்,

  • உடற்பயிற்சிக்கு தேவையான பொருட்கள், சுய விலாசமிட்ட வெள்ளைநிற இரண்டு தபால் உறைகள், தேசிய மாணவர் படை சான்றிதழ்(இருந்தால்) கொண்டு வரவேண்டும்.

  • இரு நாட்கள் தங்க தேவையான ஏற்பாடுகள், சாப்பாட்டு செலவை அவர்களே ஏற்க வேண்டும்.

  • கோவை சூலூரில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் ஜூலை 14, 15ம் தேதிகளில் காலை 7 மணி முதல் 10 மணிக்குள் ஆஜராகவேண்டும்.

  • இதுகுறித்து சென்னை, தாம்பரத்தில் உள்ள விமானப்படை தேர்வு மையத்தின் கமாண்டிங் ஆபீஸரை (எண் 8)யோ, 044 223 95553 என்ற டெலிபோன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்

மக்கள் வளமுடன் வாழ அமைப்போம் இராஜப்பாட்டை!!

0 comments: