]]

Monday, August 20, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 2

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்

Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறைசெயலர்,

முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி.

E-mail: abideen245400@yahoo.com
Ph: 14564-245400/265252 Ilayangudi, Sivaganga District

---------------------------------------------------------------------------------------

கடல் சார்ந்த படிப்புகள்

கடலின் முக்கியத்துவம் உணர்ந்த நம் நாடு இதற்கென்றே ஒரு தனித்துறையை கடல் வளர்ச்சி துறை என்ற பெயரில் 1981 ஆம் ஆண்டு ஆரம்பித்து விட்டது. கடல்களைப் பற்றியும் அதில் மறைந்து கிடக்கும் வளங்கள் பற்றியும் ஆராய்வது தான் இத்துறையின் நோக்கம்.

பூமிப்பந்தில் நான்கில் மூன்று பாகம் கடலாகத்தான் இருக்கிறது. இத்துறை தொடர்ந்து வளரக்கூடிய துறை. பெரும்பாலும் போட்டிகள் அதிகம் இருக்காது.

இத்துறையில் அதிகம் காலூன்ற வேண்டுமெனில் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த கல்வி மட்டும் போதுமானதாக இருக்காது. அதாவது கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியியல், உயிரியல் போன்ற பலதுறை படிப்புகளில் ஆர்வம் இருக்க வேண்டும்.


எங்கெல்லாம் வேலை கிடைக்கும்

நம் நாடு ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வருவதால் பல ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடலியல் வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள். பல பொது பணித்துறை நிறுவணங்களில் இத்துறை சார்ந்தவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.

கல்வித் துறையில் இறங்கலாம். கடல் ஆராய்ச்சியில் ஈடுபடலாம். கடல் தொடர்புடைய பொறியியல் துறையில் இணைந்து கொள்ளலாம். பன்னாட்டு நிறுவணங்களிலும் பணியாற்ற பல வாய்ப்புகள் உள்ளன.

என்ன படிக்கலாம்?

கடலியலில் பல துறைகள் உள்ளன. உங்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ள துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதோ கடலியலில் உள்ள பல்வேறு துறைகள்.

Physical Oceanography

இது கடலின் புற இயலைப் பற்றிப்படிக்கும் படிப்பு கடல்களின் தன்மை இப்படிப்பில் ஆராயப்படுகிறது.

Chemical Oceanography

கடலின் வேதிப்பண்புகள் பற்றிய படிப்பு. கடல் தண்ணீரில் என்னென்ன பொருள்கள் கலந்திருக்கின்றன. எந்த பொருளை பிரித்தெடுப்பது லாபகரமாக இருக்கும் போன்றவற்றை படிப்பது இத்துறை.

Bio-Oceanography

கடலில் என்னென்ன உயிரிகள் தோன்றி வளர்கின்றன என்பதை ஆராயும் படிப்பு. கடல் உயிரியின் பொருளாதாரத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று அறிவதே இத்துறையின் நோக்கம்.

Geological Oceanography


கடலின் மேல்மட்டம் மற்றும் மேல்மட்டத்திற்கு சற்று கீழ் உள்ளவைகளைப் பற்றி ஆராயும் படிப்பு இது. கடல்களின் தரைமட்டத்தில் உள்ள பலவகையான உலோகங்கள், தாதுக்களை பற்றியும் இப்படிப்பில் ஆய்வு செய்யப்படுகின்றது.

எங்கே படிக்கலாம்?

கடல் தொடர்புடைய படிப்புகள் கீழ்க்கண்ட கல்வி நிறுவணங்களில் படிக்கலாம்.

இந்திய தொழில் நுட்பக்கழகம், சென்னை

அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், இராஜாக்க மங்களம்

அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி (தொண்டி)

கொச்சி பல்கலைக்கழகம், கொச்சி

கோவா பல்கலைக்கழகம், கோவா

இத்துறையில் மேலும் விபரங்களை பெற கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.

பெருங்கடல் வளர்ச்சி துறை,
சி ஐ ஓ வளாகம், போதி சாலை,
புதுடெல்லி - 110003.

தேசிய ஆழியியல் கழகம்,
சுதனா பவ்லா,
கோவை – 403004.

மத்திய மாநில அரசானை தேர்வுக் குழுக்கள் நடத்தும் தேர்வுகள் மற்றும் பல போட்டி தேர்வுகளுக்கு தேவையான குறிப்பேடுகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடுபவர்கள்

Sakthi Publishing House
1-C Jeer Street (Near Cholaiappan Street)
Washermenpet – Chennai
Phone : 5967807


எஸ். ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்

மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: