]]

Sunday, August 19, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 1

கடலும் கப்பலும் - கடல் (கப்பல்) துறை பயிற்சி

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி.

Ph: 14564-245400/265252 Ilayangudi, Sivaganga District

---------------------------------------------------------------------------------------


கப்பல் துறை பிரிவுகள்

கப்பலைப் பொறுத்தவரை மூன்று பிரிவுகள் உள்ளன.

ஒன்று டெக், இரண்டாவது எஞ்சின், மூன்றாவதாக சலூன் (சமையல் பிரிவு)

டெக் பிரிவில் போக்குவரத்து, சரக்கு கையாளுதல், பராமரிப்பு போன்றவைகள் அடங்கும். இன்ஜின் பிரிவு இஞ்சினின் இயக்கத்தையும் கேட்டரிங் பிரிவு சமையலையும் கவனித்துக் கொள்ளும் பிரிவாகும். இம்மூன்று பிரிவும் சிறப்பாக செயல்படும் கப்பல்கள் மிகச் சிறந்தவையாக இருக்கும்.


கப்பல் மாலுமியாக சேர விரும்புபவர்களுக்கு டைரக்டரேட் ஆப் ஷிப்பிங் இந்திய கப்பல் அமைச்சகத் துறையின் ஒப்புதலோடு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிறுவனத்தில் நான்கு மாத பயிற்சி கொண்ட பொதுப்படையான புதுமுக வகுப்பிற்கும், சமையல் பிரிவிற்கும் (Saloon) குறைந்தது 10ம் வகுப்பு முடித்தவராக இருத்தல் வேண்டும்.

வயது 17.5 முதல் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

இப்பயிற்சி முடிந்தவுடன் இந்திய CDCவுடன் இந்திய கப்பல் அமைச்சகம் சான்றிதழை வழங்கும். இதன் மூலம் எந்த கப்பல் கம்பெனியிலும் பணியாற்றலாம்.


மேலும் இதில் அதிகாரியாகவோ, இன்ஜினியராகவோ ஆக விரும்புபவர்கள் இந்திய அரசாங்கத்தின் மெர்க்கன்டைல் டிபார்ட்மென்ட் நடத்தும் தேர்வினை எழுதுவதன் மூலமாக அந்த இலட்சியத்தை சுலபமாக அடைய முடியும். டெக்கேட் மற்றும் மரைன் இன்ஜினியரிங் பயிற்சி பெறுபவர்கள் நிச்சயமாக அதிகாரியாகவோ இன்ஜினியராகவோ உருவாகலாம்.

கல்வித்தகுதி

இப்பயிற்சியில் சேர 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 20 இருக்க வேண்டும்.

பி.எஸ்.சி (B.Sc.,) படித்திருந்தால் 55 சதவீத மதிப்பெண்களும் வயது 22க்குள்ளாக இருக்க வேண்டும்.

அல்லது B.E., / B.Tech முடித்திருப்பவர்கள் 24 வயது கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

இதன் முதன்மை பயிற்சி காலம் 3 - 5 மாதங்களாகும்.

இப்பயிற்சிகள் மூலம் கப்பல் அதிகாரி ஆகவும் அதன் பிறகு தேர்வு எழுதுவதன் மூலம் படிப்படியான பதவி உயர்வைப் பெறலாம்.

கப்பல் இன்ஜினியரிங் துறையில் பயில்பவர்கள் கப்பலில் இன்ஜினியராக பணியாற்ற முடியும்.

இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் மெக்கானிகல், மரைன் எலக்டிரிக்கல், ஷிப் பில்டிங் டிப்ளமோ படிப்பில் குறைந்தது இறுதி ஆண்டில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றவராக இருத்தல் வேண்டும். வயது 22க்கு குறைவாக இருக்க வேண்டும்.


மேற்கண்ட டெக்கேட் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பட்டம் டிப்ளமோ ஏதாவது ஒன்றில் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்கள் உடல் தகுதி குறைபாடு இல்லாதவர்களாகவும் கண் பார்வை 6:6 என்ற அளவில் கண்ணாடி அணியாதவர்களாகவும் வண்ணங்களை துல்லியமாக அறிந்து கொள்ளும் திறம்படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

இன்ஜினியரிங் துறையில் சேர விரும்புபவர்கள் உடல்நலத் தகுதியோடு கூட 10, 12, டிப்ளமா ஏதாவது ஒன்றில் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்.

கண் கண்ணாடி அணிபவராக இருந்தால் கண்ணாடி ப்ளஸ் பை மைனஸ் 2.5க்கு உள்பட்ட சக்தியாக இருத்தல் அவசியம்.

எங்கே சேரலாம்

இப்பயிற்சியில் சேர சிறந்த பயிற்சியினை யார் அளிப்பார் என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. உங்களது கேள்விக்கான பதிலை சென்னை SAMS நிறுவனம் தருகிறது.

Southern Academy of Maritime Studies Pvt. Ltd. (SAMS) என்பது D.G. ஷிப்பிங் அப்ரூவ்டு நிறுவனம், தற்பொழுது கப்பல் கல்வியில் முதன்மையாக விளங்குகிறது மற்றும் ISO 9002-2 சான்றிதழ் பெற்றுள்ளது. Det Norske Veritas Norwayவுடன் கூட்டாக இணைந்து செயல்படுகிறது.

விபரங்களுக்கு :

சதர்ன் அகாடமி அஃப் மெரிடிம் ஸ்டடீஸ்

பி.லிட். எண் 110, கிழக்கு மாதா சர்ச் தெரு,

ராயபுரம் சென்னை - 600 013

தொலைபேசி 25900558, 25900563, 25902674

மொபைல் 0-98410-37738, 31042100, 31037933

E-mail:samstudy@vsnl.com

Website:www.samsindia.com

எஸ். ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: