]]

Tuesday, August 21, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 3

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறைசெயலர்,
முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி.

E-mail: abideen245400@yahoo.com

Ph: 14564-245400/265252

Ilayangudi, Sivaganga District

---------------------------------------------------------------------------------------

மகத்தான மரைன் இன்ஜினியரிங்

மகாராஷ்டிரம் புனெயில் உள்ள இந்தியக் கடற்படை பொறியியல் கல்லூரி கடற்படை பொறியியல் கல்லூரியில் (The Naval College of Engineering) நான்கு ஆண்டு பி.டெக்., படிப்பு இலவசமாக அளிக்கப்படுகின்றது.

கல்வித்தகுதி

12ஆம் வகுப்பு தேர்ச்சி அத்துடன் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்த பட்சம் 75 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

வயது வரம்பை பொறுத்தவரை மாணவர்கள் 16 வயதிலிருந்து 19 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அட்டவணை இனைத்தவர்களுக்கு குறிப்பிட்ட வயது சலுகை அளிக்கப்படுகிறது.

இது பற்றிய விபரம் அந்தந்த விளம்பரங்களில் தெரிவிக்கப்படும்.

உடல் தகுதி

உயரம் 157 செ.மீ மார்பளவு 5 செ.மீ விரிவடைய வேண்டும். நல்ல கண்பார்வை அவசியம்.

தேர்வு முறை விண்ணப்பதாரர்

பணியாளர் தேர்வாணையம் (SSB) நடத்தும் உளவியல் தேர்வு, தனி குழுத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு கோவாவில் உள்ள நேவி அகாடமியில் 6 மாதங்கள் கடற்படை அடிப்படைப்பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் புனெயில் உள்ள கடற்படை பொறியியல் கல்லூரிக்கு அனுப்பப்படுவர்.


படிப்புக்கான அனைத்து செலவுகளையும் கடற்படை ஏற்றுக்கொள்ளும், 4 ஆண்டுகளின் படிப்புக்கு பின்னர் பி.டெக் (B.Tech) பட்டம் அளிக்கப்படும்.

புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இதை வழங்கும். இப்பட்டம் பெற்றோர் கடற்படையில் அதிகாரியாக அமர்த்தப்படுவர். வைஸ் அட்மிரல் பதவிவரை அவர்கள் பணி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

பெயர், முகவரி, தந்தை பெயர், திருமண நிலை, மாநிலம், நாடு, பிறந்த தினம், படித்த பள்ளியின் பெயர், 12ம் வகுப்பில் இயற்பியல் வேதியியல், கணிதம் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள், ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண், விளையாட்டு (அல்லது) N.C.C.ல் இருந்தால் அதன் விவரம் இதற்கு முன்பு எஸ். எஸ். பி. (S.S.B) தேர்வில் கலந்து கொண்டிருந்தால் அது குறித்த விவரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பம் தயார் செய்ய வேண்டும்.

பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தை விண்ணப்பத்தில் ஒட்ட வேண்டும்.

பெற்றோர் (அல்லது) பாதுகாவலரின் உறுதி மொழிக் கடிதத்தையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ்களின் நகல்களில் GAZETTED அதிகாரியிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பும் தபால் உறையின் குறிப்பிட வேண்டும்.

கீழக்கரையில் உள்ள முஹம்மது சதக் கல்லூரியிலும் இப்படிப்பு உள்ளதால் முஸ்லிம் சமுதாய மாணவர்கள் இங்கு படிப்பதற்கு இடங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

கணிதத்தை காதலிக்கும் எத்தனையோ கணிதப் புலிகள் உண்டு. அவர்களின் தாகத்தை தீர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது. கணிதம் பற்றிய அனைத்து தகவல்களை அறிய

Indian Academy of Mathematics,

46, Shankarbagh,

Indore – 452 006.

எஸ். ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: