]]

Saturday, August 25, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 6

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை

செயலர்,முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி.
Ilayangudi, Sivaganga District

E-mail: abideen245400@yahoo.com
Ph: 14564-245400/265252

---------------------------------------------------------------------------------------

டெய்ரி டெக்னாலஜி - பால் பண்ணை படிப்பு

பால் உற்பத்தி என்பது கிராமத்தை அடிப்படையாக கொண்டது என்ற நிலை தற்பொழுது மாறிவிட்டது. பால் மற்றும் பால் பொருள்களின் தேவை உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

படித்து பட்டம் பெற்று தொழில் செய்ய விரும்புபவராக இருந்தால் இந்த படிப்பு மிகவும் உபயோகமாக இருக்கும்.

இந்த படிப்பில் பட்டம பெற நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும்.

இந்த படிப்பிற்கு பி.டெக் (டெய்ரி டெக்னாலஜி) என்று பெயர்.

12ம் வகுப்பு முடிந்த பின் இந்த படிப்பில் சேரலாம்.

12ல் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களையும் படிக்க வேண்டும்.

இந்த பாடத்திற்கு நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

தேர்வுகள் மே மாதத்தில் நடைபெறலாம்.

இந்த படிப்பிற்கான தேர்வினை வேளாண் ஆராய்ச்சிக் குழுவின் கல்வி பிரிவு அகில இந்தியஅளவில் நடத்துகிறது.

தேர்வு முறை

தேர்வு ஒரே நாள் எழுத வேண்டும். இதில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல், கணிதம், வேளான் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் 12வது தரத்திலேயே இருக்கும்.

வயது வரம்பு

வயது 17க்கு குறையாமல் இருக்க வேண்டும். அதிகபட்சம் 21 ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 21ம் நாள் விளிம்பு நாளாக கணக்கிடப்படும்.

தகுதிகள்

12வது வகுப்பு தேர்வில் ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களில் 60 சதவீதத்திற்கு குறையாத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அட்டவணை இனத்தவர்களுக்கு 55 சதவீதம் போதுமானது.

12வது தேர்வு எழுதப் போவதாக இருந்தாலும் அந்த ஆண்டின் விண்ணப்ப தேதிக்குள் விண்ணப்பித்து விட வேண்டும்.

விண்ணப்ப படிவம்

விண்ணப்பபடிவம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் வாரம் முதல் மார்ச் இரண்டாம் வாரம் வரை வழங்குகின்றனர்.

விண்ணப்பத்தின் விலை ரூ. 150 வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும்.

அட்டவணை இனத்தவர்களுக்கு ரூ 75 போதுமானது.

சின்டிகேட் வங்கியின் சில குறிப்பிட்ட வங்கிகளில் மட்டுமே விண்ணப்பங்கள் கிடைக்கும்.

இந்த பாடப்பிரிவு பற்றிய மேலும் விபரங்கள் அறிய :-

Indian Council of Agriculture Research (KAR),

Education Division,
Krishi Anusandhan Bhavan,
Pusa Gate,
New Delhi – 110012.

Director,
National Academy of Agricultural Research and Management,
Rajendra Nagar,
Hyderabad – 500030.

Campus Dean,
Central Agrucultural University (CAU),
Imphal,

Manipur - 795 001.

தமிழ்நாடு அரசு தேர்வாணைய நுழைவு தேர்வுகளுக்கும் 50 மேற்பட்ட பயிற்சி தேர்வுகளுக்கும் இங்கே பயிற்சி நடத்துகிறார்கள். இலவச ஆலொசனையும் பெறலாம்.

Engrance Guru,
1/203-52nd Street,

7th Avenue,
Ashok Nagar,
Chennai – 83.
Phone: 3713299 / 3715376

S. ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்

மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: