]]

Saturday, August 25, 2007

வெளிநாட்டு வேலை

சிக்ரியில் படித்தால் வெளிநாட்டு வேலை

காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் (சிக்ரி) கார் பேட்டரி, கடற்காற்றுக்கும் இரும்புகளில் துருபிடிக்காத பெயின்ட் வகை, மின்வேதியியல் தொடர்பான புதிய ஆய்வுகள் நடக்கின்றன.


இங்கு அண்ணா பல்கலை.,யின் கீழ் பி.டெக்., படிப்பு 1988ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

ஆண்டிற்கு 35 & 40 மாணவர்கள் வரை சேர்க்கப்படுகின்றனர்.

அடிப்படை அறிவியல், கெமிக்கல், மின்வேதியியல் பாடம் கற்றுத்தரப்படுகிறது.

இந்தியாவிலேயே கெமிக்கல், மின்வேதியியல் பாடத்தில் பி.டெக்., படிப்பு சிக்ரியில் மட்டுமே நடத்தப்படுகிறது.

புனாவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ், கொல்கத்தா எவரெடி பேட்டரி நிறுவனம், பெங்களூரூ ஏ.எம்.சி.ஓ., பவர் சிஸ்டம் போன்று பல்வேறு மாநில கம்பெனிகள் சிறந்த மாணவர்களை தேர்வு செய்ய இங்கு கேம்பஸ் இன்டர்வியூ நடத்துகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் 101 மாணவர்கள் வெளிநாட்டு கம்பெனிகளில் இன்ஜினியர்களாக வேலை பார்க்கின்றனர்.

மேலும், இங்கு படிக்கும் மாணவர்கள் மேற்படிப்பிற்காக கனடா, அமெரிக்கா பல்கலை.,களுக்கு சென்றுள்ளனர்.

0 comments: