]]

Saturday, August 25, 2007

சிங்கப்பூரில் இந்திய டாக்டர்களுக்கு அதிக மவுசு!

சிங்கப்பூரில் இந்திய டாக்டர்களுக்கு அதிக மவுசு!
மருத்துவ பணிகளில் 13 ஆயிரம் பேருக்கு வேலை

இந்திய மருத்துவ நிபுணர்களுக்கு சிங்கப்பூரில் மவுசு அதிகரித்துள்ளது.


இந்திய டாக்டர்கள் மட்டுமின்றி, சுகாதார பணிகளில் நர்ஸ்கள் முதல் பல்வேறு பிரிவு ஊழியர்களில் 13 ஆயிரம் இந்திய மருத்துவ ஊழியர்களுக்கு வேலை கிடைக்க உள்ளது.

சிங்கப்பூரில், இன்னும் நான்காண்டில், ஏகப்பட்ட தனியார் மருத்துவமனைகள் துவக்கப்பட உள்ளன. இப்போதுள்ள மருத்துவமனைகளில், மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை உள்ளது. அதை ஈடு செய்ய, இந்திய நிபுணர்கள் தான் நியமிக்கப்படுகின்றனர்.

நான்காண்டில், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் 10 லட்சம் வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சை பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அதற்கேற்ப, மருத்துவமனைகளை அதிகரிப்பதில் அந்த நாட்டு அரசு அக்கறை காட்டி வருகிறது.

கடந்த 2005ம் ஆண்டு, இந்தியா சிங்கப்பூர் இடையே பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத்தின் படி, மருத்துவ துறையில் சிங்கப்பூருக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற, இந்திய மருத்துவ நிபுணர்கள் முதல், பல்வேறு மருத்துவத்துறை ஊழியர்களை அனுப்பவும் இந்தியா முன்வந்துள்ளது.

மருத்துவ பரிசோதனைகளை, "அவுட்சோர்சிங்' முறையில், இந்தியாவில் செய்து தரவும் சம்மதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேச்சு நடத்த, சிங்கப்பூருக்கு, டாக்டர் நரேஷ் ட்ரெகான் தலைமையில் நிபுணர்கள் குழு சென்றுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், கோடிக்கணக்கில் செலவாகும் அறுவை சிகிச்சைகளுக்கு, இந்தியாவில், சில லட்சம் ரூபாய் தான் செலவாகிறது. அதனால் தான், வெளிநாட்டு நோயாளிகள், இந்தியா வந்து கொண்டிருக்கின்றனர்.


இன்னும் நாலாண்டில், இந்த வெளிநாட்டு நோயாளிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அதை பயன்படுத்தி, அன்னியச் செலாவணியை பெருக்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்கு, தன் நாட்டில், போதுமான அளவில் மருத்துவ நிபுணர்கள் மட்டுமின்றி, சாதாரண மருத்துவ ஊழியர்களும் பற்றாக்குறையாக உள்ளதால், இந்தியாவில் இருந்து நியமித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதனால், டாக்டர்கள் உட்பட 13 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். அவற்றில் பெரும்பாலும், இந்தியர்கள் நியமிக்கப்படுவர். இந்தியர்கள் பணியை பயன்படுத்தி, மருத்துவ துறையில் ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று சிங்கப்பூர் கணக்கு போட்டுள்ளது.

0 comments: