]]

Saturday, August 25, 2007

கவிதை: வரலாறு - வறளா ஆறு.

இப்னு ஹம்துன் அவர்களின் ஒரு கவிதையை இங்குப் பதிவுச் செய்கிறேன்.


வரலாறு
- இப்னு ஹம்துன்

அங்கிருந்து ஒரு கரம்
அழித்து எழுதி வைக்கும்
எங்கிருந்தோ வரும் கரம்
இழித்து எழுதி வைக்கும்
இடையில்
புகுந்ததொரு கரம்
பழித்து எழுதி வைக்கும்
உள்ள(ப்) பெருமை
வழித்து எழுதவும்..
பிறருக்கெனில் அதை
கழித்து எழுதவும்..
சுயநலம் பாராட்டி
சுழித்து எழுதவும்...
எங்கும்
எப்போதும்
காத்திருக்கின்றன
கரங்கள்.

கரங்களையும்
பதிவுசெய்தபடி
கரை புரண்டோடுகிறது காலம்.

மிருகத்தின் மூத்திரம்
விரகத்தின் எச்சில்
கர்வத்தின் கீழ்த்துளி
புனிதத்தின் பெயரால்
கொட்டப்படும் கழிவுகள்
இருந்தும்...
ஒரு சுய சுழற்சியில்
தன்னைத்தானே
சுத்திகரித்துக்கொண்டு
சுழன்றோடுகிறது
வறளா ஆறு!

0 comments: