]]

Friday, August 24, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 5

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர்,முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி.

Ilayangudi, Sivaganga District

Ph: 14564-245400/265252

---------------------------------------------------------------------------------------

கால்நடை மருத்துவ படிப்புகள்

கால்நடை மருத்துவர்கள் என்றதுமே ஏதோ கால்நடைகளுக்கு நோய் வந்தால் அதற்கு சிகிச்சை தருவது மட்டுமே அவர்களுடைய வேலை என்று பலரும் நினைக்கிறார்கள். அது ஒரு தவறான கருத்து.

ஒரு தேசத்தின் முன்னேற்றத்துக்கு எப்படி மருத்துவர்கள் பொறியாளர்கள் போன்றோரின் பங்களிப்பு இன்றியமையாததோ, அதே போல கால்நடை மருத்துவர்களின் பங்களிப்பும் இன்றியமையாததாகும்.


நம் நாடு பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தைப் பெறவும், முட்டை உற்பத்தியில் உலக நாடுகளுள் ஐந்தாம் இடத்தில் இருப்பதற்கும், கால்நடை மருத்துவர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் காரணமாயிருக்கிறார்கள்.

சரி. ஒருவர் கால்நடை மருத்துவராக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும். எங்கு படிக்க வேண்டும்? ஒருவர் கால்நடை மருத்துவராக வேண்டுமென்றால் அதற்கு அவர் கால்நடை மருத்துவப்ப பட்டப்படிப்பை படிக்க வேண்டும்.

தமிழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பை (பி.வி.எஸ்.சி) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

கால்நடை மருத்துவப்படிப்பும் எம.பி.பி.எஜ் போன்ற ஒரு தொழிற்படிப்பேயாகும். எம.பி.பி.எஸ் மனிதர்களுக்கான மருத்துவம் இது மனிதர்கள் தவிர்த்த விலங்கினங்களுக்கான மருத்துவப்படிப்பு.

இப்படிப்பில் சேர விரும்புபவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொழில் நுட்பக் கல்விக்கான நுழைவுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.

கல்வித்தகுதிகள்

12ல் அறிவியல் பாடங்களில் உயிரியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 12 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படும் கட் ஆஃப் மார்க் அடிப்படையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்கும்..

எங்கு படிக்கலாம்?

கால்நடைப் பல்கலைக்கழகத்துக்கு இரண்டு கால்நடை மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. ஒன்று சென்னையிலும், மற்றொன்று நாமக்கல்லிலும் உள்ளது. இக்கல்லூரிகளின் முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
110 வேப்பேரி நெடுஞ்சாலை,
வேப்பேரி,
சென்னை 600007.

கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும்

ஆராய்ச்சி நிலையம்,
நாமக்கல் 637001,
நாமக்கல் மாவட்டம்.

இதே போல இந்தியா முழுவதும் 34 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உண்டு. இந்தக் கல்லூரிகள் அனைத்திலுமுள்ள இடங்களில் 10 விழுக்காடு இடங்கள் இந்தியக் கால்நடை மருத்துவக் கவுன்சில் மூலம் நிரப்பப்படும். அதற்காக தேசிய அளவில் ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

அதில் 12 படிப்போர் கலந்து கொண்டு எழுதலாம். தேர்ச்சி பெற்றால், நாட்டின் பிற மாநிலங்களிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

வேலைவாய்ப்புகள்

பி.வி.எஸ்.சி. படித்து முடித்தோர், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை உதவி மருத்துவராகப் பணியாற்ற வாய்ப்புகள் உண்டு.

சமீபகாலமாக தமிழக அரசு இப்பணியிடங்களை நிரப்பவில்லை. இதன் காரணமாக அரசு வேலை கிடைப்பதில் சற்று கனக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆயினும் கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் சுயமாக சிகிச்சை செய்வதன் மூலம் பொருளீட்டலாம்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கு சிகிச்சை செய்யும் கிளினிக்குகளை நடத்தி வருகிறார்கள்.

கிராமப்புறங்களில் மாடு, ஆடு போன்ற கால்நடைகளுக்க சிகிச்சை செய்கிறார்கள்.

ஆந்திரா, கேரளா, போன்ற மாநிலங்களில் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களில் பணிபுரிய கால்நடை மருத்துவப் பட்டதாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கிறார்கள்.

S. ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: