]]

Friday, August 24, 2007

இலவச மாதிரி தேர்வு

'கேட் தேர்வு'க்கு இலவச மாதிரி தேர்வு

'கேட் தேர்வு' எழுதும் மாணவர்களுக்காக தேசிய அளவிலான இலவச மாதிரி 'கேட்' தேர்வு 26ம் தேதி நடக்கிறது.

நாட்டில் உள்ள ஏழு ஐ.ஐ.டி., மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எஸ்., கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாக 'கேட்' தேர்வு நடத்தப்படுகிறது.

2008ம் ஆண்டிற்கான "கேட்' தேர்வு பிப்ரவரி 10ம் தேதி நடைபெறவுள்ளது.

'கேட் போரம்' அமைப்பு சார்பில் இலவச மாதிரி கேட் தேர்வு 26ம் தேதி காலை 9:30 மணிக்கு 30 நகரங்களில் நடக்கிறது.

சென்னையில் மாதிரி "கேட்' தேர்வு கோபாலபுரம், கத்தீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடக்கிறது.

இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 93800 53805, 098866 00010 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களை 'கேட் போரம்' அமைப்பின் இணையதளத்தில் (www.gateforum.com) தெரிந்து கொள்ளலாம்.

0 comments: