]]

Monday, August 6, 2007

வருத்தமான செய்தி

வருத்தமான செய்தி

பரங்கிப்பேட்டை நகுதா மரைக்காயர் தெருவை சேர்ந்த சகோதரர் ஷாகுல் ஹமீது நேற்று மரணமடைந்துள்ளார்.

இறைவன் அவரது முடிவை சவுதியில் வைத்துள்ளான். இன்னாலில்லாஹி... (நாம் இறைவனுக்குரியவர்கள் அவனிடமே திரும்பி செல்வோம்)

நேற்று 4-8-07 இரவு தம்மாமிலிருந்து ரியாத் சென்றுக் கொண்டிருந்த போது (ஷாகுல் ஹமீது அவர்கள் தான் டிரைவ் செய்துள்ளார். இதர இரு தமிழ் சகோதரர்கள் இரு பங்களாதேஷ் காரர்கள் என்று கேள்வி) வழியில் ஒரு டிரயிலரில் இவர்கள் சென்ற கார் மோதியுள்ளது. ஷாகுல் ஹமீத் ரியாத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்று மரணமடைந்துள்ளார்.

என்னோடு பழகிய அந்த நண்பர் பற்றிய சில நினைவுகள்.

94-95வாக்கில் அவருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போதெல்லாம் தப்லீக் இயக்கத்தில் செயலாற்றியவர். நம்மோடு ஏற்பட்ட பழக்கத்திற்கு பிறகு தவ்ஹீத் சிந்தனையால் ஈர்க்கப்பட்டார். இஸ்லாம் குறித்து அவ்வப்போது என்னோடு கலந்துப் பேசுவார். நான் சவுதி வந்த பிறகு அவருடன் தொடர்பு இல்லாமல் இருந்தது. ஓராண்டுக்கு முன் அல்ஹஸாவில் அவரை சந்தித்தேன். பழைய நினைவுகளையும் அன்றைய சூழலையும் கலந்துக் கொண்டோம். (ஒரு மட்டன் கடையில் எங்கள் சந்திப்பு நடந்தது)

பிறகு அப்கீக் என்ற ஊரில் ஒரு கேஃப்டிரியா ஆரம்பித்து சில காலம் நடத்தியுள்ளார். அதுவரை எனக்கு தெரியும். இன்றைக்குதான் அவர் டிரைவராக சொந்த தொழில் செய்துவந்தது தெரியவந்தது (அவரது மரணத்திற்கு பிறகு)

பழக இனிமையான நண்பர். அவரது தந்தையாரும் - அவரும் இஸ்லாமிய சிந்தனையில் நிறைந்தவர்கள்.

இன்றைக்கு அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அணுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே.. சகோதரர்களே அந்த சகோதரனின் கப்ர் வாழ்க்கை மற்றும் மறுமை வாழ்க்கைக்காக பிரார்த்தியுங்கள்.

சகோதரன்
நிஜாம்

3 comments:

said...

அல்லாஹ் சகோ.சாஹுல் ஹமீதின் கப்ரு&மறுமை வாழ்க்கையில் அருள் புரிவானாக...அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அல்லாஹ் ஆறுதலை தந்தருள்வானாக...

said...

நண்பரே..
நேற்று காலை இச்செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

நல்ல நண்பர். கண்ணியமானவர்.

கடந்த மாதம் மேலும் இரு நண்பர்களுடன் ஊருக்குப்போவதற்கு ஆயத்தமாகி விமானப்பதிவும் செய்திருந்தார். பிறகு ஏனோ போகவில்லை.

அவருக்காகப் பிரார்த்திப்போமாக.

said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நம்மூர் ஷாஹுல் ஹமீது நானா அவர்களின் வஃபாத் செய்தியை கேள்விப்பட்டு மனம் மிகவும் வேதனையடைந்தது. எல்லாம் வல்லவன் அல்லாஹ் நாட்டம். அதை தவிர நாம் வேறென்ன சொல்ல முடியும்? இன்னாலில்லாஹி வ அன்னா இலைஹி ராஜிஊன்... வேலை பளுவின் காரணமாக நீண்ட நாட்கள் வீட்டுக்கு தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. நேற்று (திங்கட்கிழமை 06.08.2007) வீட்டிற்கு தொடர்பு கொண்டபோது, தந்தையார் வீட்டில் இல்லை. எங்கே சென்றுள்ளர்கள் என கேட்டபோது, ஷாஹுல் நானாவின் வஃபாத் செய்தியை மைனி சொன்னார்கள். அவர்கள் வீட்டிற்கு தந்தையார் சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்கள். செய்தியை கேட்டவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது உண்மை. உடனே என் நினைவுகள் பழைய நாட்களை நோக்கி சென்றது. நான் அரபி மதரஸாவில் கல்வி பயிலும்போது விடுமுறைகளில் வருவதுண்டு. அவ்வப்போது தப்லீக் ஜமாஅத்துகளிலும் செல்வேன். ஒரு தடவை (1993 அல்லது 1994 என நினைக்கின்றேன்) மாயவரம் பக்கமுள்ள இடங்களுக்கு ரழமான் மாத நடுப்பத்தில் தப்லீக் தாவா பணிகளுக்காக சென்றோம். அப்போது ஷாஹுல் நானாவும் வந்திருந்தார். சிறப்பான அனுகுமுறை, தெளிவான பேச்சு, யாருடைய மணமும் புண்படாமல் நடப்பது என பல நல்ல விஷயங்களை நான் அவரிடம் கண்டேன். அது போன்றே ரமழான் காலங்களில் மக்தூம் அப்பா (பக்கிம்ஞாத்து) பள்ளியில் கடைசி பத்து தினங்களில் இரவு வேளைகளில் நாங்கள் (நான், என் மாமா அப்துல் ஹமீது, ஷாஹுலின் நெருங்கிய நண்பர் ஜவஹர் அலி, தோழர் மவ்லவி பாரூக் பாகவீ போன்றோர்) குழுவாக கூடி இறை வணக்கங்களில் ஈடுபடுவதுண்டு. அவ்வாறான நினைவுகள் இன்னும் பசுமையாக நெஞசில் பதிந்துள்ளன. பக்கத்து பக்கத்து தெருவாக இருப்பதாலும் நல்ல பழக்கம் உண்டு. அவரின் தம்பி செய்யது என் பள்ளி மற்றும் தெருத் தோழன், அவரின் தந்தையார் நல்ல குணமுடையவர். சிறு வயது காலங்களில் அவர்கள் வீட் திண்ணைதான் ரபீவுல் அவ்வல் மாதங்களில் எங்களுக்கு மவ்லீது ஓதும் மேடையாக இருந்தது. அவரின் வஃபாத் செய்தியை கேள்விபட்டவுடன் பழைய நினைவுகள் பொங்கி வருகின்றன.
எல்லம் வல்ல அல்லாஹ் அவரின் நன்மையான காரியங்களை ஏற்றுக்கொண்டு, குற்றங்குறைகளை மன்னித்து தன் அருனைப் பெற்ற நல்லடியார்களுடன் இணைத்து வைக்கவும், அவரின் பிரிவால் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவரின் குடும்பத்தினருக்கு 'ஸப்ரன் ஜமீலா' என்ற அழகிய பொறுமையை தந்தருள வேண்டியும் நாம் அனைவரும் துஆ செய்வோமாக! ஆமீன்!!