]]

Tuesday, August 28, 2007

ஹஜ் பயணிகளுக்கான இலவச தடுப்பூசி

ஹஜ் பயணிகளுக்கான இலவச தடுப்பூசி

ஹஜ் பயணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.

ஆக. 30ம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கோவை, ரேஸ்கோர்ஸ் ரோடு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திலும்,

திண்டுக்கல், தேனி மாவட்டத்தினருக்கு திண்டுக்கல் நேருஜி நகர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திலும்,

திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தினருக்கு திருவாரூரில் உள்ள அலுவலகத்திலும்,

ராமநாதபுரம் மாவட்டத்தினருக்கு ராமநாதபுரத்தில் உள்ள அலுவலகத்திலும் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

ஆக. 31ம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டத்தினருக்கு ஈரோடு அரசு பொது மருத்துவமனையிலும்,

மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தினருக்கு மதுரை விஸ்வநாதபுரம் சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் அலுவலகத்திலும்,

தஞ்சை மாவட்டத்தினருக்கு தஞ்சாவூர் காந்தி ரோட்டில் உள்ள அலுவலகத்திலும்,

தூத்துக்குடி மாவட்டத்தினருக்கு காயல்பட்டினத்தில் 11, திருச்செந்ததூர் ரோட்டில் உள்ள கே.எம்.டி., ஆஸ்பத்திரியிலும் முகாம் நடைபெறும்.

செப். 1ம் தேதி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தினருக்கு சேலம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திலும்,

திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டத்தினருக்கு திருச்சி ரேஸ் கோர்ஸ் ரோடு ஜமால் முகமது கல்லூரியிலும்,

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தினருக்கு கடலூர் பீச்ரோட்டில் உள்ள அலுவலகத்திலும்,

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தினருக்கு நெல்லை ஹை கிரவுண்ட், காதிர்நகர், முஸ்லிம் அநாதைகள் இல்லக்குழுவிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும்.

முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

தடுப்பூசி போட வருவோர் 1 எம்.எல்., அளவுள்ள டிஸ்போசபிள் சிரிஞ்ச் மற்றும் ஊசியை தவறாமல் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: