]]

Wednesday, August 29, 2007

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 2-ம் கட்டமாக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு

சலுகை மூலம் பதிவுமூப்பை புதுப்பித்தவர்களுக்கும் வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 2-ம் கட்டமாக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், அரசு அளித்த சலுகை மூலம் விடுபட்ட பதிவு மூப்பை (சீனியாரிட்டி) புதுப்பித்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 7 ஆயிரத்து 979 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பதிவு மூப்பு கேட்கப்பட்டு தகுதியானவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன.


ஆனால், 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை பதிவுமூப்பை புதுப்பிக்க தவறி பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் அரசு அறிவித்த சலுகை மூலம் பதிவை புதுப்பித்துக்கொண்டவர்கள் சீனியாரிட்டி பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு 5 ஆயிரத்து 98 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு விரைவில் பணிநியமன உத்தரவு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பதிவு மூப்பு தகுதி பெற்றிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்கனவே அரசு பணியில் இருந்ததால் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

இதனால் அறிவிக்கப்பட்ட பணி இடங்களில் 2 ஆயிரத்து 881 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப 2-ம் கட்ட சீனியாரிட்டி பட்டியல் வேலைவாய்ப்பு பயிற்சித்துறையிடம் கேட்கப்பட்டு உள்ளது.

அரசு அறிவித்த சலுகை மூலம் விடுபட்ட வேலைவாய்ப்பு பதிவுமூப்பை புதுப்பித்தவர்கள் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: