நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க கோரி வார்டு கவுன்சிலர்கள் துண்டு பிரசுரம் விநியோகம்
பரங்கிப்பேட்டை அருகே பரபரப்பு!
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க கோரி வார்டு கவுன்சிலர்கள் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். இதனால் பரங்கிப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மஞ்சக்குழி ஊராட்சியில் தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் குளம், வாய்க்கால் தூர்வாரும் பணி கடந்த 8 மாதமாக நடந்து வருகிறது.
அந்த பணியில் 1,2-வது வார்டை சேர்ந்த மக்கள் 3 வாரம் மட்டுமே வேலை செய்தனர்.மீதி உள்ள பணிகளை செய்ய இவர்களை அழைக்கவில்லை. ஒரு சிலர் மட்டுமே அந்த பணிக்கு சென்றனர்.
இதனை கண்டித்து மஞ்சக்குழி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
அதில், மஞ்சக்குழி மக்கள் அனைவருக்கும் நூறு நாள் வேலை கொடுக்க வேண்டும். அதனை தடுக்கும் மக்கள் நலப்பணியாளர், ஊராட்சி எழுத்தர் ஆகியோரிடம் விசாரணை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதனை மனுவாக மாவட்ட கலெக்டருக்கும் அனுப்பி உள்ளனர்.வார்டு கவுன்சிலர்கள் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 comments:
Post a Comment