]]

Tuesday, August 28, 2007

சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்

1092 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்

மத்திய போலீஸ் படைகளான எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழிற் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ஐ.டி.பி.பி., சகஸ்ட்ர சீமா பால் ஆகியவற்றில் சப்இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு பணியில் சேரும் போதே சப் இன்ஸ்பெக்டர் நிலைப் பணியில் சேருவது சிறப்பான எதிர்காலத்துக்கு உதவும். இதை இந்தப் படைப்பிரிவுகள் தருகின்றன. இவற்றுக்கு பொதுப் பிரிவினர் விண்ணப்பிக்க முடியாது.

எந்தப் பிரிவில் எத்தனை காலியிடங்கள்?

எல்லைப் பாதுகாப்புப் படை 270

மத்திய தொழிற் பாதுகாப்புப் படை 262

மத்திய ரிசர்வ் போலீஸ் படை 283

இந்தோ திபெத் எல்லைப் படை 117

சகஸ்ட் சீமா பால் 160

மொத்தம் 1092

தகுதிகள்

செப்டம்பர் 14, 2007 அன்று 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது செப்டம்பர் 15, 1982லிருந்து செப்டம்பர் 14, 1987க்குள் பிறந்திருக்க வேண்டும்.

ஓ.பிசி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும்.

ஆண்கள் குறைந்தது 170 செ.மி. உயரமும் 8085 செ.மீ. மார்பளவும் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்தது 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடையைப் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்

இப்பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100.

இதை டிடியாகவோ போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பக்கூடாது. தபால் அலுவலகங்களில் கிடைக்கும் சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் பீ ஸ்டாம்பாக மட்டுமே இதை விண்ணப்பத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும். தபால் அலுவலகத்தில் கேன்சலிங் என்ற முறையில் இதை பதிவு செய்து கொள்ள வேண்டும்.


எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.

போட்டித் தேர்வு

இந்தப் பணிகளுக்காக போட்டித் தேர்வு நடத்தப்படும்.

இது 2 பகுதிகளாக நடத்தப்படும்.

முதலாவது பகுதி எழுத்துத் தேர்வு. இதற்கு 500 மதிப்பெண்கள்.

2ம் பகுதி நேர்முகத் தேர்வு. இதற்கு 100 மதிப்பெண்கள்.

எழுத்துத் தேர்வானது 2 தாள்களாக நடத்தப்படும்.

முதலாவது தாளில் பொது அறிவு, கணிதத் திறன், ரீசனிங் மற்றும் அடிப்படைத் திறன் ஆகியவை பரிசோதிக்கப்படும். இவை 200 கேள்விகளைக் கொண்டவை. 400 மதிப்பெண்கள். 2 மணி நேரம் கால அளவு. இது அப்ஜக்டிவ் வகைத் தேர்வு.

2ம் தாளில் அடிப்படை ஆங்கிலம் பரிசோதிக்கப்படும். இதற்கு 100 மதிப்பெண்கள். ஒரு மணி நேரம் கால அளவு. காம்ப்ரிஹென்சன், கம்யூனிகேஷன் மற்றும் எழுத்துத் திறன் ஆகியவை இதில் பரிசோதிக்கப்படும். இது விரிவாக விடையளிக்கும் பகுதி.

உடற்திறனறியும் தேர்வு

16 வினாடிகளில் 100 மீட்டர் ஓட்டம், 6.5 நிமிடங்களில் 1.6 கி.மீ. தூர ஓட்டம், 3 வாய்ப்புகளில் 3.65 மீட்டர் நீளம் தாண்டுதல், 3 வாய்ப்புகளில் 1.2 மீட்டர் உயரம் தாண்டுதல் மற்றும் 3 வாய்ப்புகளில் 16 எல்.பி. எடையுள்ள குண்டு எறிதல் ஆகியவை ஆண்களுக்கு நடத்தப்படும்.


பெண்களுக்கு 18 வினாடிகளில் 100 மீட்டர் தூரம், 4 நிமிடங்களில் 800 மீட்டர் ஓட்டம், 3 வாய்ப்புகளில் 2.7 மீட்டர் நீளம் தாண்டுவது மற்றும் 3 வாய்ப்புகளில் 0.9 மீட்டர் உயரம் தாண்டுவது ஆகியவை நடத்தப்படும்.


விண்ணப்பிக்கும் முறை

முழு விபரங்களையும் படிவத்தையும் எம்ப்ளாய்மென்ட் நியூஸ் ஆகஸ்ட் 18 & 24 இதழில் பார்த்துக் கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தகுதி, வயது, ஜாதி, திறன்கள் போன்றவற்றுக்கான சான்றிதழ்களின் சுய அட்டெஸ்டட் நகல்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் ரூ.6 அஞ்சல் தலை ஒட்டிய சுய முகவரியிட்ட போஸ்ட் கார்டை இணைக்க வேண்டும்.

மேலும் 12க்கு 25 செ.மீ. அளவுள்ள சுய முகவரியிட்ட ரூ.5 அஞ்சல் தலை ஒட்டிய உறையை இணைக்க வேண்டும்.

எந்த மண்டல காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மண்டலத்தில் உள்ள மையங்களில் மட்டுமே தேர்வை எழுத முடியும்.

சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு எழுத விரும்புவோர் தரப்பட்டுள்ள முகவரிக்கே விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி

REGIONAL DIRECTOR (SR),
STAFF SELECTION COMMISSION,
E.V.K. SAMPTH BUILDING,
2nd FLOOR, COLLEGE ROAD,
CHENNAI - 600 006.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் செப்டம்பர் 14, 2007

0 comments: