]]

Tuesday, August 28, 2007

பெல் நிறுவன வாய்ப்புகள்

பெல் (BHEL) நிறுவன வாய்ப்புகள்

மத்திய அரசு நிறுவனமான பாரத் கனரக மின் நிறுவனம் புகழ்பெற்ற நவரத்னா நிறுவனங்களில் ஒன்று என்பதை அறிவோம்.

14 உற்பத்தி கூடங்களையும், 4 மின் மண்டலங்களையும், 8 சேவை மையங்களையும், 15 மண்டல அலுவலகங்களையும் இது கொண்டிருக்கிறது.

போபால், ஜகதீஷ்பூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் உள்ள இதன் மையங்களுக்குத் தேவைப்படும் ஆர்டிசான் பணிக்கான 322 இடங்களை இது அறிவித்துள்ளது.

ஐ.டி.ஐ. தகுதியுடையவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விளம்பர எண் 1/2007ன் படி இவை அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரிவு வாரியாக பணியிடங்கள்:


* எலக்ட்ரீஷியன் 39
* எலக்ட்ரானிக்ஸ் 44
* பிட்டர் 68
* கிரைண்டர் 10
* மெசினிஸ்ட் 77
* டர்னர் 85
* வெல்டர் 8


மொத்தம் 322 பணியிடங்களில் 52 எஸ்.சி. பிரிவினருக்கும், 54 எஸ்.டி. பிரிவினருக்கும், 46 ஓ.பி.சி. பிரிவினருக்கும் ஒதுக்கப் பட்டுள்ளன.

தகுதிகள்

* 10ம் வகுப்புக்குப் பின் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஒன்றில் நேஷனல் டிரேட் சர்டிபிகேட் மற்றும் தேசிய அப்ரென்டிஸ்ஷிப் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 55 சதவீதம் பெற்றிருந்தால் போதும்.


* செப்டம்பர் 8, 2007 அன்று 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும்.


தேர்வு முறை


* மத்திய பிரதேச தலைநகரம் போபாலில் மட்டுமே இதற்கான எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதற்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கலாம். இதில் தகுதி பெறுபவருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.


* சிறப்பான உடற்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

முதல் இரண்டரை ஆண்டுகள் தற்காலிக பணியாளராகப் பணியாற்ற வேண்டும். இந்த காலகட்டத்தில் முதல் 18 மாதங்களுக்கு தினசரி சம்பளம் தரப்படும். அதன் பின் ஒரு ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளமாகத் தரப்படும். இதன் பின் நிரந்தர சம்பள விகிதத்தில் நியமிக்கப்படுவீர்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

www.bhelbpl.co.in இன்டர்நெட் தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

செப்டம்பர் 8, 2007 அன்று வரை மட்டுமே இதில் விண்ணப்பிக்க முடியும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது கிடைக்கும் பதிவுத் தாளை பிரிண்ட் எடுத்து தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் செப்டம்பர் 8, 2007.

0 comments: