]]

Tuesday, August 28, 2007

விமானப்படையில் ஐ.டி., பணிவாய்ப்பு

விமானப்படையில் ஐ.டி., பணிவாய்ப்பு


ஐ.டி., எனப்படும் இன்பர்மேஷன் டெக்னாலஜி பணிகளை எண்ணற்ற சாப்ட்வேர் நிறுவனங்கள் தருவதையும் பொருளாதார மேம்பாட்டுக்கு இந்தத் துறை பெரிதும் உதவுவதையும் காண்கிறோம்.

இது போன்ற எண்ணற்ற தொழில்கள் செழித்து வளர தேவைப்படும் பாதுகாப்பைத் தரும் இந்திய ராணுவத்தின் விமானப்படையும் ஐ.டி., தகுதிக்கான பணியிடங்களைக் கொண்டிருப்பதை அறிவீர்களா?

விமானப்படையின் ஏரோ நாடிகல் பிரிவில் கமிஷன் ஆபீசர் பணியிடங்கள் பற்றிய விபரங்கள் இதோ.

தகுதிகள்

எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் இவற்றில் ஒன்றில் குறைந்தது 60 சதவீதத்துடன் பி.இ. அல்லது பி.டெக். தகுதி பெற்றிருக்க வேண்டும்.


ஜனவரி 2, 1980லிருந்து ஜனவரி 1, 1990க்குள் பிறந்திருக்க வேண்டும்.

நேரடி சேர்க்கை

இப்பணிக்கு நேரடி முறையில் தேர்வுகள் நடத்தப்படும்.

டில்லி, சென்னை, ஐதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரூ போன்ற நாடெங்கும் உள்ள 14 மையங்களில் இதற்கான நேரடி சேர்க்கை முறை நடத்தப்படும்.

ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 1 வரை இவை மையங்களைப் பொறுத்து வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படும்.

சென்னை, பெங்களூரூ, திருவனந்தபுரம், ஐதராபாத் ஆகியவற்றில் செப்டம்பர் 1 அன்று இவை நடத்தப்படும்.

குறிப்பிட்ட மையத்தில் காலை 8 முதல் 11க்குள் நேரடியாக ஒரிஜினல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இது தவிர பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, கல்லூரி அடையாள அட்டை இவற்றில் ஒன்றையும் வைத்திருக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

தேர்வு பற்றி குறிப்பு

ஜெனரல் இன்ஜினியரிங்கில் 45 மற்றும் ஸ்பெசலிஸ்ட் தாளில் 30 கேள்விகள் கேட்கப்படும்.

இவை அப்ஜக்டிவ் கேள்விகள்.

இதில் தகுதி பெறுபவருக்கு பிக்சர் பெர்சப்ஷன் டெஸ்ட் மற்றும் குழு விவாதம் ஆகியவை நடத்தப்படும்.

விண்ணப்பப் படிவம்

விண்ணப்பத்தை www.careerairforce.nic.in தளத்திலிருந்து டவுண்லோட் செய்து நிரப்பி எடுத்துச் செல்லவும்.

இதை எம்ப்ளாய்மென்ட் நியூஸ் ஆகஸ்ட் 18 & 24 இதழிலும் பார்த்துக் கொள்ளலாம்.

தகவல் மையங்கள்

இது குறித்த தகவல்களை பின்வரும் முகவரியிலிருந்தும் தரப்பட்டுள்ள போன்களிலும் பெறலாம்.

PUBLICITY CELL, AIR HQ (VB),
"DISHA", MOTILAL NEHRU MARG,
NEW DELHI - 110 011.
Ph. 011 23010231 Extn.7080/7081/6617 (or) 23013690.
Telefax: 23017918

0 comments: