]]

Saturday, August 11, 2007

போக்குவரத்து விரிவாக.. ஜமாஅத் கோரிக்கை

*இந்தக் கோரிக்கை பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாத் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது:*
உயர்திரு. மாவட்ட ஆட்;சியர் அவர்கள், கடலூர்.
பெருமதிப்பிற்குரிய ஐயா, பரங்கிப்பேட்டை வாழ்பொதுமக்கள் மற்றும் பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள ஊர்களில்வாழும் மக்கள் சார்பாக இக்கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் அவர்களின்மேலான தகவலுக்காகவும் நடவடிக்கைக்காகவும் சமர்ப்பிக்கிறேன்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கடலூர் புதுநகர் OT யிலிருந்து பரங்கிப்பேட்டைவாத்தியாப்பள்ளி வரை அரசு டவுன் பஸ் இயங்கிவருகிறது. பரங்கிப்பேட்டையிலிருந்துகடலூர் புதுநகருக்குச்செல்வோர் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் தனியார் பேருந்துகளையே பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. மேலும் பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் புதுநகருக்கு மிகக்குறைந்த அளவிலேயே தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. பலநேரங்களில் மணிக்கணக்கில் கடலூர் புதுநகருக்குச் செல்ல பேருந்துகள் இருப்பதில்லை. இதனால் கடலூர் புது நகருக்குச் செல்லவேண்டிய பொதுமக்கள், வியாபாரிகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள்பெறும் கிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில் கடலூர் புதுநகருக்குச் செல்வோர் பு.முட்லூர் சென்று அங்கிருந்து கொத்தட்டை வழியாககடலூர் செல்லும் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதனால் தேவையற்ற கால விரயமும் பணச்செலவும் ஏற்படுகிறது. மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி கல்லூரிக்கும் அலுவலகத்திற்கு சென்றடையமுடியாதநிலை உள்ளது. அரசின் புதிய போக்குவரத்து கொள்கையின்படி 35 கிலோமீட்டர் தூரம் வரை அரசு டவுன்பஸ்களை இயக்கலாம் என அறிகிறோம். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரங்கிப்பேட்டைவாழ் பொது மக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர், வணிகர்கள் ஆகியோரின் சவுகரியம் கருதி கடலூர் புதுநகரிலிருந்து ஒவ்வொரு மணி இடைவெளியிலும் ஒரு டவுன் பஸ்ஸை பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி வரை இயங்கிட சம்மந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குமாறு பணிவுடன் கோருகிறோம். இந்த நியாயமான கோரிக்கை ஏற்கப்பட்டு கடலூர் புதுநகரில் இருந்து பரங்கிப்பேட்டைவாத்தியாப்பள்ளி தெருவரை புதிய வழித்தடம் துவங்கினாலும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்துவரும் கடலூர் பழைய நகரி லிருந்து பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி வரை இயங்கி வரும் டவுன் பஸ்களும் தொடர்ந்து இயங்கத்தக்க வகையில் புதிய வழித்தடத்தினை இயக்கிட ஆவனச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஐக்கிய ஜமாஅத்தின் இந்தக் கோரிக்கையை நாங்களும் இந்த இணைய வழியாக அரசுக்கு வலியுறுத்துகிறோம். அரசு இணையங்கள் வழியாக இந்தக் கோரிக்கையை தொடர்ந்து முன் மொழிய சகோதரர்கள் தயாராகட்டும்.

2 comments:

said...

போக்குவரத்தை விரிவுபடுத்த கோரிக்கை என்ற தலைப்பில் வந்த கட்டுரையை படித்து மகிழ்வடைந்தேன். நம்முடைய பதிப்பு இன்று செயல்முறையாக்கத்திற்கான முதல் படியை ஏறியுள்ளது. (பார்க்க:சிந்தனைக்கு-1, 30 ஜீலை 2007 - http://ppettai.blogspot.com/2007/07/blog-post_30.html)
அல்ஹம்மதுலில்லாஹ்... இவர்களுக்கு உதித்த சிந்தனை நம்முடைய இணைத்தில் இருந்து கிடைத்திருந்தால் நிச்சயம் அதிகம் மகிழ்வடையக்கூடியவனாக இருந்திருப்பேன்... இன்னும் இது போன்ற செய்திகள் இணையம் வழியாக பரவவும், வழியுறுத்தவும் படும் போது செயல்பாடுகள் தீவிரமடையும். கருத்துருவாக்கமும் நிலைபெறும்.

நம்முடைய ஜமாத் இணையம் போன்ற - தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி சமுதாயத்தின் வளர்ச்சியை மெருகூட்டலாம். இன்ஷாஅல்லாஹ்.. இந்த கோரிக்கை நிறைவேறட்டும்.