Degree & Diploma Courses
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
E-mail: abideen245400@yahoo.com
Ph: 04564-245400/265252
சின்னத்திரையில் பெரியவர்களாகுங்கள்
இன்று டிவியை ஆன் செய்தால் சுமார் அறுபத்தைந்து சேனல்களுக்கு மேல் வருகின்றன. இதில் சுமார் இருபது சேனல்கள் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் வசதியை இந்தியாவிலேயே வைத்திருக்கின்றன. அவ்வப்போது பல புது சேனல்களும் முளைக்கின்றன.
தொலைக்காட்சித் துறையில் இந்த வருடம் மட்டும் சுமார் ஐந்தாயிரம் போருக்கு வேலைவாய்ப்பு உருவாகியிருக்கிறது. இவற்றிலும் நிறைய வேலைவாய்ப்புகள் உண்டு.
டிவி சேனல்களில் அரசு நடத்தும் தூர்தர்ஷன் நாடு முழுக்க அதிக அளவில் மக்களைச் சென்றடைகிறது. இங்கு பெரும்பாலும் தூர்தர்ஷன் அதிகாரிகளும் தயாரிப்பாளர்களுமே நிகழ்ச்சிகளைத தயாரிக்கிறார்கள்.
இதற்கென இந்தியாவெங்கும் உள்ள தொலைக்காட்சி நிலையங்களில் ஏராளமான கலைஞர்களை வேலைக்கு வைத்துள்ளார்கள். ஒரு சில நிகழ்ச்சிகளைத் தனியார் தயாரிக்க அனுமதிக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர் என்றால், அதற்குரிய படிப்பும் அனுபவமும் கைகொடுக்கும்.
12ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்தால் ஒளிப்பதிவு, பிலிம் எடிட்டிங் படிக்கலாம்.
கற்றுத்தரும் குறிப்பிடத் தகுந்த இடங்கள்
தரமணி அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரி சென்னை.
புனெயில் உள்ள ஃபிலிம் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட், டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா.
கொல்கத்தாவில் சத்யஜித்ரே ஃபிலிம் டெலிவிஷன் இன்ஸ்டியூட்.
0 comments:
Post a Comment