]]

Sunday, September 2, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 12

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்

Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை

செயலர்,முன்னாள் மாணவர் கழகம்

Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி.Ilayangudi, Sivaganga District

E-mail: abideen245400@yahoo.com

Ph: 14564-245400/265252

---------------------------------------------------------------------------------------

சினிமாட்டோகிராஃபி படியுங்கள்

இன்றைய காலக்கட்டத்தில் சினிமா துறையில் புதிதாக நுழைபவர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகின்றது. இன்றைய சினிமா உலகம் இளைஞர்களின் திறமைக்கு நல்ல தீனி போடக்கூடிய துறைகளில் ஒன்றாக இருக்கிறது.

சினிமாவில் நடிப்புத்தவிர சினிமாட்டோகிராஃபி சவுண்ட் இன்ஜினியரிங், எடிட்டிங் போன்ற கோர்ஸ்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உண்டு.

சினிமாட்டோகிராஃபி படித்தவர்கள் அரசாங்க செய்திப்படங்கள், குறுநாடகங்கள் தனியார் நிறுவனங்களுக்கான தொழில முறைப் படங்கள் போன்றவற்றையும் எடுக்கலாம்.

ஒரு சினிமாவை உயிர்ப்புடன் நிறுத்துவதில் முக்கியமான பங்கு எடிட்டிங் துறைக்கு உண்டு. எடிட்டிங் படித்தவர்கள் சினிமாவில்தான் நுழைய வேண்டுமென்பதில்லை. தொலைக்காட்சி நிலையங்கள், தொலைக்காட்சித் தொடர் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவற்றில் நுழையலாம்.

சவுண்ட் இன்ஜினியரிங்கும் திரைப்படம், தொலைக்காட்சி சார்ந்த படிப்புதான். இதற்கும் சிறந்த எதிர்காலம் உண்டு.

எங்கே படிக்கலாம்?

இன்று அதிகமான சிறுசிறு கல்வி நிலையங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இது போன்ற துறைகளில் பயிற்சி தருவதாக விளம்பரம் செய்து பெயரளவில் சான்றிதழ் வழங்கி வருகிறார்கள்.

இதுபோன்ற கல்வி நிலையங்களில் சோந்து படிப்பதைத் தவிர்த்து அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் சேர முயற்சி செய்யுங்கள். சென்னையில் அரசு திரைப்படக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பது சிறந்ததாக இருக்கும்.

S. ஆபிதீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: