பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses
S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,
விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.
E-mail: abideen245400@yahoo.comPh: 04564-245400/265252
---------------------------------------------------------------------------------------
நீங்களும் சிற்பி ஆகலாம்
போட்டி குறைந்த படிப்புகளில் இதுவும் ஒன்று. இதில் திறமைக்கு ஏற்ப வாய்ப்பும் வருமானமும் கிடைக்கும். இந்த துறையில் படித்த மாணவர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மரியாதையும் மதிப்பும் கிடைத்து வருகிறது.
கலை படைப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு தற்சமயம் அதிகரித்துள்ளது. இந்த துறையில் உங்கள் திறமையும், ஆர்வமும் மட்டுமே மூலதனம். இந்த தொழிலில் ஒன்றுமே தெரியாதவர்கள் கூட இந்த தொழிலின் அடிப்படையிலிருந்தே கற்றுக் கொள்ளும் வகையில் ஆரம்பத்திலிருந்தே கற்றுக் கொள்ளலாம்.
இதில் பட்டைய படிப்பு (Diploma Course), பட்டப்படிப்பு (Degree Course) போன்ற படிப்புகள் உள்ளன.
கல்வித்தகுதி
12வது வகுப்பில் தேறியிருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 50 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும்.
நீங்கள் ஓவியம், சிற்பம் பயின்று, கலை போன்றவற்றில் படித்தவர்களாக இருந்தால் 45 விழுக்காடு மதிப்பெண்கள் போதுமானது.
வயது வரம்பு
17 வயது இந்த படிப்பிற்கான வயது வரம்பாகும். அந்தந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உங்கள் வயதை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.
இந்தத் துறையில் சிறந்த திறமை இருக்குமெயானால் 6 மாத காலம் வயது விதிமுறைகளை தளர்த்திக் கொள்ளலாம்.
இது தவிர பகுதி நேர படிப்பிலும் சேர்ந்து பட்டம் பெறலாம்.
நுண்கலை படிப்பு பற்றிய அதிகமாக விபரங்களை பெற:
சென்னை பல்கலைக்கழகம்,
நுண்கலைத்துறை,
நூற்றாண்டு விழா மண்டபம்,
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி,
சென்னை - 600005.
S. ஆபிதீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!
0 comments:
Post a Comment