பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses
S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,
விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.
E-mail: abideen245400@yahoo.comPh: 04564-245400/265252
---------------------------------------------------------------------------------------
தீயணைப்புத் துறை
தீயணைப்புத் துறையில் சேர விருப்பம் உள்ளவர்கள் முயற்சிக்கலாம்.
இதில் வெவ்வேறு பிரிவுகள் உள்ளது. சேவை, நிர்வாகம், பராமரிப்பு இப்படி பல பிரிவுகள் இருக்கும். பல வீர தீர சாகசங்களுக்கும் வாய்ப்பு உள்ள தொழில் இது.
தீயணைப்பு படைவீரர்கள் நிர்வாகம் செய்தல், சட்டதிட்டங்கள் பொது சொத்துக்களை பாதுகாப்பது போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
உடல் தகுதிகள்
165 செ.மீக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
50 கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
மார்பு அளவு சாதாரண நிலையில் 81 செ.மீ இருக்க வேண்டும். விரிவடைந்து 5செ.மீக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதிகள்
குறைந்த பட்சம் 12 அல்லது அதற்கு சமமான படிப்பு அறிவியலை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும்.
இதில் அட்டவணை இனத்தவருக்கு 28வயது வரை அனுமதிக்கப்படுகிறது.
ஏற்கனவே பணியாளராக இருந்தால் 27 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத்தேர்வு
அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
டெல்லி, மும்பை, ஹைதராபாத், புவனேஸ்வர் போன்ற இடங்களில் ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மாதத்தில் நடைபெறும்.
இந்த நுழைவுத்தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும்.
முதல் பகுதி ஆங்கிலம், பொது அறிவு கேள்விகளைக் கொண்டு இருக்கும்.
இரண்டாவது பிரிவில் பொது அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் கேள்விகள் இருக்கும். கேள்விகள் 12ம் வகுப்பு தரத்திலேயே கேட்கப்படும்.
விண்ணப்பம் செய்வது
ஒவ்வொரு வருடமும் Employment News பத்திரிகையிலோ அல்லது முக்கிய செய்தித்தாள்களிலேயோ அறிவிப்பு வெளிவரும்.
எத்தகைய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு இருக்கும். அதே படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மொத்த இடங்கள்
இங்கு பயிற்சிக்கு 12 இடங்கள் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் 2 பயிற்சிகள் 33 வாரங்களில் நடைபெறும்.
இதில் 21 வாரங்கள் கல்லூரியிலேயே நடைபெறும்.
12 கால வாரம் செய்முறைப் பயிற்சியாகும்.
பயிற்சிக்கு பிறகு ஏதாவது ஒரு முக்கிய தீயணைப்பு நிலையத்தில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வார்கள்.
இந்த துறை பற்றிய மேலும் விபரங்கள் அறிய :
National Fire Service College,
Ministry of Home Affairs,
Nagpur,
Maharastra.
S. ஆபிதீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!
0 comments:
Post a Comment